நான் கேள்விப்பட்டேன் இப்பொழுதோ காண்கிறேன் Shreveport, Louisiana USA 65-1127E 1உட்காருங்கள். மீண்டுமாக இன்றிரவு வந்திருப்பது நல்லது. மறுபடியுமாக இப்பொழுது கர்த்தருக்கு ஊழியம் செய்ய எங்களுக்கு கிடைத்துள்ள தருணத்திற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். சென்ற இரவு உங்களை நீண்ட நேரம் வைத்துக் கொண்ட பிறகு, மறுபடியும் இன்றிரவு உங்களை நீண்ட நேரம் வைத்திருப்பது நியாயமல்லவென்று எண்ணுகிறேன். இந்தியானாவிலிருந்து இப்பொழுது தான் வந்துள்ள, கர்த்தருக்குள் எங்களுடன் தோழமை கொண்டுள்ள சகோதரர் ஒருவர், கண்ட விசித்திரமான சொப்பனத்தைக் கேட்டுவிட்டு வந்துள்ளேன். அந்த சொப்பனம் அவரை உணர்ச்சி வசப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு அவர் தன் வாழ்நாளில் ஷ்ரீவ்போர்டுக்கு வந்ததே கிடையாது. ஆனால், அன்றொரு இரவு அவர் ஷ்ரீவ்போர்டை அடைந்ததாக சொப்பனம் கண்டார். அவருடைய காரில் அல்ல. அந்த சொப்பனத்தில் அவர் நான் பேசிக் கொண்டிருந்த சபையை அடைந்தார். நான் பிரசங்கம் செய்து, ஜனங்களுக்காக ஜெபம் பண்ணி முடித்தவுடனே, ''ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது'' என்று நான் கூறினதாக அவர் கூறினார். அவர் அடுத்த நாளும் கூட்டத்துக்கு வந்திருந்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்த கட்டிடம் காண்பதற்கு எவ்வாறிருக்கும் என்று அவருக்கு தெரியுமென்று கூறினார். அவர், ''தெருவின் மறுபக்கத்தில் ஒரு நகர அரங்கம் இருந்தது, ஆனால் அவர்கள் அந்த அரங்கத்துக்குள் செல்லவில்லை. கூட்டம் ஒரு கல் கட்டிடத்தில் இந்த பக்கம் நடந்துக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு பக்கப்பகுதி இருந்தது. அந்த கட்டிடம் இப்படியாக அமைந்திருந்தது'' என்றார். அந்த பையன் ஒரு சொப்பனக்காரன். நான் அவருடைய சொப்பனங்களைக் கண்டிருக்கிறேன். அவை உண்மையென்று எனக்குத் தெரியும். 2கடைசி இரவு கூட்டத்தின் போது நான் பேசிவிட்டு வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் பண்ணினேன் என்றும், ''அப்பொழுது ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது'' என்று நான் கூறினதாகவும் கூறினார். அது இடியைப் போல் முழங்கினதாம். அப்பொழுது ஜனங்கள் பயந்து போய் கூச்சலிட்டார்களாம். இடி முழக்கம் மறைந்தவுடன், ஒரு சத்தம் அதனின்று எழுந்து பேசத் தொடங்கினதாம். இந்த பேச்சு தொடர்ந்து கொண்டிருந்த போது, இங்குள்ள ஜன்னல் கம்பிகளின் வழியாக தேவனுடைய பகைமை அக்கினி ஸ்தம்ப உருவில் உள்ளே நுழைந்ததாம். அவர் அதை முன்பு கண்டதில்லை, நாம் அதைக் குறித்து பேசினதை அவர் கேட்டிருக்கிறார், ஆனால் அவர் அதை கண்டதில்லை. அவர், ''அது ஜன்னல்களின் வழியாக இப்படி உள்ளே நுழைந்து, நீங்கள் படத்தில் காண்பது போன்று, அந்த ஒளியின் அமைப்பு கொண்டு, கூட்டத்திலுள்ள ஜனங்களின் மேல் நின்றது'' என்றார். நான் அங்கு நின்று கொண்டு, அது ''யேகோவா தேவன்'' என்று கூறினேனாம். அவர், ''மோசே ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்த போது, அவர்கள் மோசே எங்களுடன் பேசட்டும், தேவன் பேச வேண்டாம். நாங்கள் மரித்துப் போவோம்'' என்று கூறினதை நினைவுபடுத்தியது என்றார். அவர் தொடர்ந்து, ''எல்லோரும் தரையில் கிடந்து, கைகளையுயர்த்தி கதறினார்கள். நானும் கூட கதறி, ''தேவனாகிய கர்த்தாவே, உம்மை நேசிக்கிறேன்! உம்மை நேசிக்கிறேன்! என்றேன்'' என்றார். அவருடைய மனைவி அவரைக் குலுக்கி, உறக்கத்தினின்று எழுப்பினாளாம். 3முன்னாள் மெதோடிஸ்டு போதகரான சகோ. ஜூனியர் ஜாக்சன், இப்பொழுது உட்பாதையில் நடந்து செல்வதைக் காண்கிறேன். அவர் கண்ட சொப்பனம் அவரை கலக்கமுறச் செய்ததால், அவர் இங்கு வந்துவிட்டார். அவர் உள்ளே நுழைந்த போது, அவர் சொப்பனத்தில் கண்டது போலவே உள்ளதைக் கண்டு பெரிதும் வியந்தார். அதன் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. கர்த்தர் அதை எனக்கு மறைத்து விட்டார். சகோ. ஜாக்சன் அதை சொப்பனம் கண்டதால், ஏதாவதொன்று நடக்கக்கூடும். ஏனெனில், அவர் தேவனுடைய உத்தமமும், உண்மையுள்ள ஊழியக்காரன் என்றறிவேன். அவர் சொப்பனங்கள் கண்டு என்னிடம் வருவார், கர்த்தர் என்னிடம் அர்த்தம் உரைப்பார், அவை பிழையின்றி நிறைவேறி வந்துள்ளன. நான் அரிசோனாவுக்கு செல்வதைக் குறித்தும், அவர் ஒருமுறை சொப்பனம் கண்டார். அவர் வெகுவாக கலக்கமுற்றுள்ளார். அவருடைய மனைவியை அவர் கூட கொண்டு வந்துள்ளார். அவள் பிரசவிக்கும் நிலையில் இருக்கிறாள். எனவே அவர்கள் இங்கு வரக்கூடிய ஒரே வழி, விமானத்தின் மூலமாகவே. இங்கு வருவதற்கு அவரிடம் ஒரு காசு கூட இல்லை; யாரோ ஒருவர் அவருக்கு பணம் தந்தார். எல்லாமே அதிசயமாக கிரியை செய்துள்ளது. எனவே, ஏதாவதொன்று நிகழக்கூடும்; அப்படி நாங்கள் நம்புகிறோம். கர்த்தர் நமக்கு என்ன தரப்போகிறார் என்று நமக்குத் தெரியாது. 4நாம் வாழும் இந்த நாளில் இயேசுவின் வருகைக்கு சற்று முன்புள்ள காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக, நாம் கர்த்தருக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நான் உங்களுக்கு ஏற்கனவே கூறியுள்ளபடி, சரித்திரத்திலேயே இது மிகவும் பெரிய காலம். மற்றெந்த காலத்தைக் காட்டிலும் இக்காலத்தில் உலகில் வாழவே எனக்கு விருப்பம். மறுபடியுமாக இன்றிரவு எனக்கு முன்னால் என் நல் நண்பர் சகோ. டாஷ்ஷைக் காண்கிறேன். இன்று காலை அவரைக் குறித்து அரங்கத்தில் குறிப்பிட்டேன். இன்று சகோ. டாஷ்ஷுக்கு தொண்ணூற்று மூன்று வயதாகின்றது. அது, எவ்வளவு பெரிய ஆசிர்வாதம்! அவருடைய நீண்ட கால வாழ்க்கையை அவர் தேவனுடைய மகிமைக்காகவும், துதிக்காகவும் வாழ்ந்து வந்துள்ளார். இன்று அவருக்கு தொண்ணூற்று மூன்று வயது. என் சகோதரனே, உமக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்றிரவு தேசம் பூராவும் இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறுவார்கள் என்று நானறிவேன். அவர் ஓரல் ராபர்ட்ஸுக்கு நெருங்கிய நண்பர், இன்னும் பலருக்கும். சுவிசேஷத்தில் அவர் பலருக்கு உதவி செய்துள்ளார். அவர் நமக்கு நெருங்கிய நண்பரும் கூட. 5சகோ. மான்னை (Brother Mann) இங்கு காண்பதில் மகிழ்ச்சி. அவர் வேறொரு மெதோடிஸ்டு போதகர். அவர் இரட்சிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவர். அவர் இங்கு அமர்ந்துள்ளார். அவரும் இந்தியானாவிலிருந்து வந்துள்ள நமது சகாக்களில் ஒருவர். அவருக்கு அருகில் சகோ. ஹிக்கர்ஸன் உட்கார்ந்திருப்பதை அறிகிறேன். அவர் ஜெபர்ஸன்வில், இந்தியானாவிலிருந்து வந்துள்ள எங்கள் மூப்பர்களில் ஒருவர் (ஜெபர்ஸன்வில் சபையார் இன்றிரவு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்). எங்களுடைய மூப்பர்களில் மற்றுமொருவர் சகோ.வீலர். இங்கு எங்கோ உள்ளதாக கேள்விப்படுகிறேன். அவர் உட்கார்ந்திருக்கும் இடத்தை நான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, யாரோ ஒருவர் அந்த பக்கம் விரலைச் சுட்டிக்காட்டுகிறார். சற்று கழிந்து அவரைக் கண்டுபிடிக்கிறேன். அதோ அவர் வலது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், ஆம். சகோ. பாங்க்ஸ் உட், இன்றிரவு நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பீர்களானால், உங்கள் சகோதரன் நேற்று இரவு இங்கு வந்திருந்தார். நான் வெளியே செல்லும் போது, அவரைக் கண்டேன். சகோ. லைல், யேகோவா சாட்சி. அந்த முழு கூட்டமே இரட்சிக்கப்பட்டது. கர்த்தருடைய ஒரு தரிசனத்தின் மூலம், லைல் இரட்சிக்கப்பட்டார். 6அன்று லைல் படகில் உட்கார்ந்து கொண்டிருந்தார், அதற்கு முந்தின நாள், ''ஜீவனின் உயிர்த்தெழுதலைக் குறித்து ஏதோ ஒன்று நிகழப்போகின்றது'' என்று அவரிடம் கூறப்பட்டது. அவர் உண்மையான யேகோவா சாட்சி. அன்று காலை அவர் படகில் உட்கார்ந்து கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்... அவரிடம் கென்டக்கி நாட்டார் உபயோகிக்கும் பெரிய தூண்டில் முள் இருந்தது, அதை ஒரு சிறிய மீன் விழுங்கினது. அவர் தூண்டிலை இழுத்தபோது, அந்த மீனின் செவுள்கள், குடல்கள் எல்லாமே வெளியே வந்துவிட்டன. அவர் அந்த மீனை தண்ணீரில் எறிந்துவிட்டார் (சிறு சூரிய மீன்). அவர், ''சிறியவனே, நீ கடைசி முறையாக தண்ணீருக்குள் போகிறாய்'' என்றார். அது! தண்ணீரில் துடி துடித்து இறந்தது. காற்று அதை லீல்லிக் குட்டைக்கு அடித்து சென்றது. 7நாள், நான் உட்கார்ந்து கொண்டு, ''ஒரு சிறு பிராணி உயிரோடெழும்பப் போகிறது என்று பரிசுத்த ஆவியானவர் என்னிடம் உரைக்கிறார்'' என்று கூறினேன். ஒருக்கால் நான் வீடு திரும்பின பிறகு, அது ஒரு பூனைக் குட்டியாக இருக்கலாம் என்று எண்ணினேன். நானும் சகோ. உட்டும் தூண்டில் இறைக்காக மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்த போது (சகோ. உட் இன்றிரவு இதை கேட்டுக் கொண்டிருக்கிறார்). என் சிறிய மகள், அவள் இப்பொழுது வாலிபப் பெண்ணாக இங்கு அமர்ந்திருக்கிறாள். அவள் இந்த உயர்ந்து, மெலிந்த இராணுவ வீரனுக்கு விவாகத்துக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறாள், (அவனை நான் காண்கிறேன்) - என்னிடம் வந்து, ''அப்பா....'' என்றாள். அவளும், அவளுடன் கூட இருந்த மற்ற பெண்ணும். ''நாங்கள்...'' என்றனர், யாரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த மிருகத்தையாகிலும் வீட்டில் வளர்க்கலாம், ஆனால் எனக்கு பூனை என்றால் பிடிக்கவே பிடிக்காது. எனவே அவள்.... பிரான்ஹாமின் குடும்பத்தார் யாருக்குமே. எனவே, நாங்கள்.... அவள், ''அப்பா, நாங்கள் ஒரு பூனையைக் கண்டோம். அது ஏதோ ஒன்றை தின்றுவிட்டது, யாரோ அதற்கு விஷம் கொடுத்து விட்டார்கள். அதன் உடல் முழுவதும் வீங்கியுள்ளது. அப்பா, அது சாகப்போகிறது, நாங்கள் ஒரு பெட்டியைக் கொண்டு வந்து, அந்த பூனையை அதற்குள் சில நாட்கள் வைத்திருக்கலாமா?'' என்று உத்தரவு கேட்டாள். 8''அந்த பூனையை நான் பார்க்கட்டும்'' என்றேன். அவர்களிருவரும் சென்று பூனையைக் கொண்டு வந்தார்கள். என்ன நடக்கப் போகிறது என்று நான் அறிந்து கொண்டேன். எனவே, அவளுக்கு ஒரு பெட்டியைக் கொடுத்தேன். அடுத்த நாள் காலை, அதில் ஏழு, எட்டு பூனைக்குட்டிகள் இருந்தன, உங்களுக்குத் தெரியும். என் சிறிய மகன், 'ஜோ' அந்த பூனைக்குட்டிகளில் ஒன்றை கையிலெடுத்து, நசுக்கி, தரையில் போட்டான். அது அங்கே துடி துடித்து சுற்றி சுற்றி வந்தது. அவன் அதை கொன்று போட்டான். நான், சகோ. உட்டின் சகோதரனான சகோ. லைலிடம், ''ஒருக்கால் இந்த பூனைக்குட்டி உயிர் பெறலாம். கர்த்தர் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதை நாங்கள் கண்டிருக்கிறோம்'' என்றேன். சகோ. லைல் இந்த வழிக்கு புதிதானவர். பரிசுத்த ஆவியானவர் அவரிடம் அவருக்கு விவாகமாகியுள்ளதென்றும், அவர் என்ன செய்திருக்கிறார் என்றும், அவர் புரிந்த பொல்லாங்கான செயல்கள் அனைத்தையும் கூறினார். சகோ. பாங்க்ஸ் இவைகளையெல்லாம் என்னிடம் ஏற்கனவே கூறிவிட்டதாக அவர் எண்ணியிருந்தார். ஆனால், அவர் அதற்கு முந்தின இரவு என்ன செய்தார் என்று நான் அவரிடம் கூறிய போது, அவரால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை, அவருக்கு என்னவென்று புரியவில்லை. 9அடுத்த நாள் காலை.... நாங்கள் இரவு முழுவதும் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். சிறு மீன்கள் அகப்பட்டன. சில மீன்களை நாங்கள் தூண்டில் இரைக்காக பிடித்தோம். அவர் அந்த சிறு மீனை தண்ணீரில் போட்டார். அது துடித்து இறந்து ஒரு பக்கம் சென்று விட்டது. அரைமணி நேரம் கழித்து நான், சகோ. லைல், மீன் தன் குடல் வரைக்கும் முள்ளை விழுங்க நீர் விட்டுவிடுகிறீர், நீங்கள் தூண்டிலை மெள்ள இப்படி தண்ணீரில் போடுங்கள். மீன் முள்ளைத் தொட்டவுடனே, மெள்ள வெளியே எடுங்கள், அதை வேகமாக இழுக்க வேண்டாம், மீன் அதை விழுங்க விட்டுவிடாதீர்கள். ''மீனைப் பிடியுங்கள்'' என்று ஆலோசனை கூறினேன். அவர், ''சரி...'' என்றார். ''அவர் பெரிய, நீளமான தூண்டில் கயிற்றை வைத்திருந்தார். அது தொங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் இப்படி செய்வது தான் வழக்கம்'' என்றார். 10அந்த நேரத்தில், ஏதோ ஒன்று மலையின் உச்சியில்லிருந்து வருவதைக் கேட்டேன். அது சுழல் காற்று. அது சுழன்று கொண்டே இறங்கி வந்தது. தேவ ஆவியானவர் படகில் வந்து, 'எழுந்து நில்' என்றார். அவர், ''செத்து போன அந்த மீனிடம் பேசி, உனக்கு உயிரைத் திரும்ப அளிக்கிறேன் என்று சொல்'' என்றார். அந்த சிறு மீன் செத்து போய் அரை மணி நேரமாக தண்ணீரில் கிடந்திருந்தது. அதன் குடல்கள் வாயிலும், செவுள்களிலும் இருந்தன. நான், ''சிறு மீனே, இயேசு கிறிஸ்து உனக்கு உயிரைத் திரும்ப அளிக்கிறார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உயிர்பெறு'' என்றேன். அது உயிர்பெற்று, வேகமாக தண்ணீரில் நீந்தி சென்று விட்டது. 11சகோ. லைல், இங்கு எங்காவது இருக்கிறீர்களா? நேற்று இரவு உங்களைப் பார்த்தேன். அவர் உள்ளேயோ, வெளியேயோ, அல்லது எங்கிருந்தாலும், உங்களை நான் காண முடியுமானால் உங்கள் கையையுயர்த்துங்கள். (யாரோ ஒருவர், ''மேல்மாடம்'' என்கிறார் - ஆசி). என்ன சொன்னீர்கள்?மேல்மாட்டத்திலா? ஓ, ஆமாம், மேல்மாட்டத்தில், ஜன்னல்களுக்குப் பின்னால், அவர் தான் அந்த மனிதன், யேகோவா சாட்சி. அவர், ''சகோ. பிரான்ஹாம்'' என்றார். அவர் உணர்ச்சி கொண்டார். அவர், ''இங்குள்ளது நல்லதல்லவா? அது எனக்காகவா செய்யப்பட்டது? நீ கடைசி முறையாக தண்ணீரில் நீந்தினாய் என்று நான் கூறி மீனல்லவா அது? அது எனக்கு மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக உள்ளது'' என்றார். நான், ''இல்லை, இல்லை, அது ஊர்ஜிதப்படுத்துகிறது'' என்றேன். அவர் அதைக் குறித்து குழப்பமுற்றார். 12நல்லது, நாங்கள் பயணம் செய்கிறோம், இத்தகைய சம்பவங்கள் நேரிடுவதைக் காண்கிறோம்... அது எதைக் காண்பிப்பதற்காக என்று சற்று யோசித்து பாருங்கள். என் ஜெபப்பட்டியலில் வலிப்பு வரும் அநேக பிள்ளைகள் உள்ளனர், அவர்களுக்காக நான் ஜெபித்து வருகிறேன். ஆனால் தரிசனம் வந்த போது, அது இவ்வளவு நீளமுள்ள இரண்டு அல்லது மூன்று அங்குலம் நீளமுள்ள ஒரு சிறு மீனுக்காக. தூண்டில் முள் அந்த மீனின் நீளம் உண்டாயிருந்தது போல் தோன்றினது. அது என்னவென்றால், தேவன் சிறிய காரியங்களின் பேரிலும் கவனம் செலுத்துகிறாரென்று உங்களுக்கு காண்பிக்கவே, பாருங்கள்! ஓருநாள் நாடு முழுவதிலும் குஷ்டரோகிகள் இருந்த போது, அவர் தமது வல்லமையை உபயோகித்து ஒரு மரத்தை சபித்தார். அது பட்டுப்போகத் தொடங்கினது. சுகமாக்கும் வல்லமை தேவைப்பட்டவர்களாக எல்லாவிடங்களிலும் ஜனங்கள் படுத்திருந்த போது. ஆனால் பாருங்கள், அவர் எல்லாவற்றின் மேலும் தேவனாக இருக்கிறார் என்பதைக் காண்பிக்க விரும்பினார். அது சிறிதானாலும், பெரிதானாலும், எதுவாயிருந்தாலும். அவர் எல்லாவற்றின் மேலும், எல்லா சிருஷ்டிப்பின் மேலும் இன்னமும் தேவனாயிருக்கிறார். எனவே அவரை நாம் நேசிக்கிறோம், ஏனெனில்.... செத்து தண்ணீரில் அரைமணி நேரமாக மிதந்து கொண்டிருந்த அற்பமான ஒரு சிறு மீனுக்குள், அவர் ஜீவ வார்த்தையைப் பேசி உயிர் பெறச் செய்வாரானால், என்றாவது ஒருநாள் அவர் நிச்சயம் தமது பிள்ளைகளுக்குள் ஜீவ வார்த்தையைப் பேசி உயிர்ப்பிப்பார் என்பதை அது நமக்கு அறிவுறுத்துகிறது. உங்கள் சரீரம் ஒரு கரண்டியளவு தூளாக இருந்தாலும் பரவாயில்லை. அவர் பேசுவார். நாம் என்றாவது ஒரு நாள் அவருக்கு உத்தரவு அருளுவோம். அவர் எல்லாவற்றிலும் சிரத்தை கொண்டுள்ள தேவனாயிருக்கிறார். நாம் செய்யும் எல்லாவற்றிலும், நாம் கூறும் எல்லாவற்றிலும், அவர் சிரத்தை கொண்டுள்ளார். இப்பொழுது நாம் தலை வணங்குவோம், எல்லாவிடங்களிலும்: 13நாம் ஜெபிப்பதற்கு முன்பாக, இன்றிரவு இங்கு யாராலும் அவர் பேரில் சிரத்தை கொண்டிருந்தது, ஆனால் நாம் அவரைக் காணவிருக்கும் அந்த மறு தேசத்துக்கு செல்வதற்கு பயணச்சீட்டை பதிவு செய்யாமலிருப்பார்களானால், உங்களுக்கு தெரியுமா? பதிவு செய்யாமல் நீங்கள் அங்கு செல்ல முடியாது. நீங்கள் இதுவரை பதிவு செய்யாமலிருந்து உங்களுக்கும், தேவனுக்குமிடையே இன்றிரவு எல்லாமே சரியாக வேண்டுமென்று ஜெபத்தில் நினைவு கூறப்பட விரும்பினால், உங்கள் கரங்களையுயர்த்தி, ''கர்த்தாவே, என்னை நினைவுகூரும்'' என்று சொல்வீர்களா? நீங்கள்... அவர் உங்கள் கையை காணட்டும். தேவனே, அதை அருள்வீராக. 14பரலோகப் பிதாவே, ஜீவனுள்ளோருக்கும் மரித்தோருக்கும் இடையே இன்றிரவு நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். இந்நாட்களில் அதிசயமான காரியங்கள் நிகழ்கின்றன, நிச்சயமாக அவை அதிசயமானவைகளே, ஆனால் தேவனே, அவை உண்மையா இல்லையாவென்று உமக்குத் தெரியும். நீரே வானத்துக்கும், பூமிக்கும் நியாயாதிபதியாக இருக்கிறீர். கர்த்தாவே, ஜனங்களை உற்சாகப்படுத்தவே இதை கூறுகிறோம் (எங்களுக்கு நீர் காண்பித்த சில காரியங்கள்) - அவர்கள் உம்மை நேசிக்கவும், உம்மை விசுவாசிக்கவும், உம்மை சேவிக்கவும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டியதாயுள்ளது. செயல்கள் எவ்வளவு சிறியவைகளாயிருப்பினும், நல்லதானாலும், கெட்டதானாலும் நீர் அதை காண்கிறீர் என்பதை அவர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். அன்புள்ள தேவனே, உயர்த்தப்பட்ட கரங்கள் ஒவ்வொன்றையும், அவைகள் மேலே உயர்த்தப்பட ஊக்குவித்த ஆத்துமாவையும், ஆவியையும் இன்றிரவு ஆசிர்வதிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். தேவனே, நதிக்கப்பாலுள்ள தேசத்துக்கு செல்ல அவர்கள் பதிவு செய்யும் இரவாக இது இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அதை அருள்வீராக. கர்த்தாவே, வியாதியஸ்தர்களையும், துன்பப்படுகிறவர்களையும் நீர் சுகப்படுத்தும். இங்குள்ளவர்களையும், தேசம் பூராவும் இது தொலை பேசியின் மூலம் சென்று கொண்டிருக்கும் இடங்களிலுள்ளவர்களையும், கர்த்தாவே, கலிபோர்னியாவிலிருந்து நியூயார்க் வரைக்கும், கனடாவிலிருந்து மெக்ஸிகோ வரைக்கும் உள்ள இரட்சிக்கப்படாதவர்களை நீர் ஆசிர்வதித்து, இன்றிரவு எங்கள் சத்தத்தைக் கேட்கும் ஒவ்வொருவரும் உம்முடைய திவ்விய பிரசன்னத்தினால் தங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு, தங்கள் வியாதிகள் நீங்கி சுகமடைவார்களாக. இந்த எங்கள் சகோ. ஜாக்சன், வினோதமான ஏதோ ஒன்று அவருடைய இருதயத்தைக் கலங்கச் செய்ததால், அவர் ஆயிரக்கணக்கான மைல்கள் விமானத்தில் பறந்து இங்கு வந்துள்ளார்: ''அவர்கள் சொப்பனங்களையும், தரிசனங்களையும் காண்பார்கள்.'' அன்புள்ள தேவனே, அதன் அர்த்தம் என்னவென்பதை எனக்கு இரகசியமாக வைத்து விட்டீர். எனக்குத் தெரியாது. ஆனால் கர்த்தாவே, நீர் எங்களை சந்திப்பீரானால், அந்த சந்திப்பிற்காக எங்கள் இருதயங்களை ஆயத்தப்படுத்தும். நாங்கள் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கட்டும். நீர் என்ன செய்யப் போகிறீர் என்றும், இந்த சொப்பனத்தின் மூலம் நீர் எங்களை சந்திப்பதாக வாக்களித்திருக்கிறீரா என்றும் எங்களுக்குத் தெரியாது. ஆனால், நீர் உமது ஜனங்களைச் சந்திப்பதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர் என்று நாங்கள் புரிந்து கொண்டிருப்பவைகளை மாத்திரம் இந்நேரத்தில் எடுத்துரைக்கிறோம். உம்மை இங்கு தத்ரூபமாகச் செய்யும்படி வேண்டிக் கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறோம், ஆமென். 15நேற்று இரவும், இன்று காலையும் உங்களை நீண்ட நேரம் நிறுத்தி வைத்துக்கொண்ட பிறகு, இன்றிரவு என் தொண்டை சிறிது கரகரப்பாயுள்ளது. நான் பிரசங்கிக்கும் போது, என் வழுக்கை மண்டையை மூடிக்கொள்ள நான் டோப்பாவை அணிந்து கொள்வது வழக்கம். ஆனால், இம்முறை அதை கொண்டு வர மறந்து விட்டேன். இந்த ஜன்னல்களின் வழியாக அடிக்கும் காற்று, என் தொண்டையில் கரகரப்பை உண்டாக்கியுள்ளது. மூடப்பட்ட இடங்களில் நான் முன்பு கூட்டங்களை வைப்பது வழக்கம். ஆனால் அந்த டோப்பா கிடைத்த பிறகு, எங்கு கூட்டம் நடந்தாலும் நான் கவலை கொள்வதில்லை. ஆனால், அதை கொண்டு வர மறந்து விட்டேன்... கரகரப்பை நான் உணருகிறேன். எனவே, உங்கள் ஜெபங்களை நான் கோருகிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு ஆராதனைகள் உள்ளன. அது என்னை ஒருவாறு... உங்களுக்குத் தெரியும், உங்களுக்கு அதிக மைல்கள் இருந்தால்... அதை நீங்கள் சொல்லிவிடலாம். 16கலிபோர்னியாவிலுள்ள உங்களுக்கும், அரிசோனாவிலுள்ளவர்களுக்கும் நாங்கள் அனைவரும் தேசத்தின் வழியாக உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறோம். பிரஸ்காட்டில் கர்த்தரின் சமூகத்தில் காத்திருக்கும் சகோ. லியோவும், அவருடைய குழுவும் இப்பொழுது அழைத்திருக்கிறார்கள். பீனிக்ஸை சுற்றிலும் உள்ளவர்களே, இன்னும் ஒரு வாரத்தில் நாங்கள் யூமாவிவிருந்து அரங்கத்தில் இருப்போம். அவர்கள் எல்லா டிக்கட்டுகளையும் விற்று விட்டார்கள், அவர்கள் ஒரு பெரிய அரங்கத்தை பெற்றிருக்கிறார்கள். ஜனங்களைக் கொள்ள அவர்களுக்கு இடம் போதவில்லை. எனவே, நீங்கள் உள்ளே வர வேண்டுமானால் நேரத்தோடே வாருங்கள். அங்கிருந்து நாங்கள் அடுத்த திங்களன்று.... அடுத்த ஞாயிறு, ஞாயிறு இரவு லாஸ் ஏஞ்சலிஸுக்கு செல்கிறோம். எனவே, உங்களை அங்கு காண எதிர் நோக்கியிருக்கிறோம். தேவனுடைய அபரிதமான ஆசிர்வாதங்கள் உங்கள் மேல் தங்கியிருப்பதாக. 17நியூயார்க்கிலுள்ள உங்களுக்கும், ஒஹையோவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ளவர்களுக்கும், மற்ற இடங்களில் உள்ளவர்களுக்கும் விரைவில் சர்ப்பத்தின் அடிச்சுவடு என்னும் செய்தியை கூடாரத்தில் பிரசங்கிக்க விரும்புகிறேன் (துவக்கத்தில் மிருகமும், முடிவில் மிருகமும்). நாங்கள் எப்பொழுது பேசப் போகிறோம் என்பதைக் குறித்து பில்லி உங்களுக்கு அறிவிப்பான். அதை நான் கூடாரத்தில் பிரசங்கிக்க எத்தனித்திருக்கும் காரணம் என்னவெனில், அது குறைந்தது நான்கு மணி நேரம் அல்லது இன்னும் அதிக நேரம் கூட பிடிக்கும். எனவே இப்பொழுது... இங்குள்ளவர்களும், நீங்கள் வேறு எங்கிருந்தாலும், யோபின் புத்தகத்துக்கு திருப்பும்படி விரும்புகிறேன். அதிலிருந்து பிரசங்கிப்பதற்கு அது மிகவும் வினோதமான ஒரு புத்தகம், ஆனால் ஒரு சில குறிப்புகளை இங்கு உபயோகிக்க விரும்புகிறேன். பிறகு நாளை காலையில், இங்கு கூடாரத்தில், ஞாயிறு பள்ளி ஆராதனை இருக்கும்... நாம் எத்தனை மணிக்கு தொடங்குகிறோம்? (ஒரு மனிதன் ''9.30'' என்று பதிலளிக்கிறார்-ஆசி). 9.30 மணிக்கு. நாளை இங்கு பேசும் சிலாக்கியத்தையும் நான் பெற்றிருக்கிறேன். கர்த்தருக்கு சித்தமானால், இந்த பொருளின் மேல் நாளை பேச விரும்புகிறேன்... அவருக்கு சித்தமரனால். இன்று பிற்பகல் நான் படித்துக் கொண்டிருந்தேன். தொழுது கொள்ளும் ஒருவனை தேவன் ஒரே ஒரு இடத்தில் தான் சந்திக்கிறார் என்பதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். தேவன் தொழுது கொள்பவனை சந்திக்கும் அந்த இடம் எதுவென்றும், அதன் பெயர் என்னவென்றும் என்னால் உங்களிடம் கூற முடியும். 18நாளை இரவு ஒரு ஆதரவைக் கேட்கப் போகின்றேன், அதாவது ஒரு சுகமளிக்கும் ஆராதனையை. எனக்கு பழமை நாகரிகம் கொண்ட சுகமளிக்கும் ஆராதனை வேண்டும். கர்த்தருக்கு சித்தமானால், இன்று எனக்கு எச்சரிப்பூட்டிய ஒரு பொருளின் பேரில் பேச விரும்புகிறேன்... நானும், சகோ.மூரும் பேசிக் கொண்டிருந்த போது என் விலையேறப் பெற்ற சகோதரர்கள் நாங்கள் வேதத்தைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தோம். அந்த சகோதரர்களுடன் கூட இருப்பதென்பது எவ்வளவு அருமையானது! பழைய காலம் போல் அப்பொழுது சகோ. மூர், சகோ. பிரான்ஹாமே, உங்களுக்கு தெரியுமா, ''நீர் எங்களுக்கு ஷ்ரிவ் போர்ட்டில் அளித்து செய்திகள் அனைத்திலும், 'ஆட்டுக்குட்டியும் புறாவும்' என்னும் உம்முடைய செய்தி தலை சிறந்து விளங்குகிறது.'' இன்றைக்கு நீர் அளித்த செய்தி உமக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கின போதிலும், ''அப்படிப்பட்ட ஒரு செய்தி இனி கிடைக்கவே சிடைக்காது'' என்றார். அதை நான் இழக்கும் போது, என் செய்தியை இழந்து விடுகிறேன். அன்பே உருவான என் அருமையான.... மரித்துக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியே, மீட்கப்பட்ட தேவனுடைய சபை இரட்சிக்கப்பட்டு; இனி-பாவமே செய்யாத வரைக்கும் உமது, விலையேறப் பெற்ற இரத்தம், அதன் வல்லமையை இழந்து போகாது. உமது காயங்களிலிருந்து, பெருக்கெடுத்து வரும் இரத்த ஆற்றை; நான் விசுவாசத்தில் கண்டமுதற்கு மீட்கும். அன்பே என் பாடலாயுள்ளது, நான் மரிக்கும் வரைக்கும், அது அவ்வாறே இருக்கும். 19நாளை இரவு, கர்த்தருக்கு சித்தமானால், ''பனிக்கட்டி போன்ற வெண்மை நிறம் கொண்ட புறாவின் செட்டைகளின் மேல்'' என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். நாளை இரவு கர்த்தர் புறாவின் செட்டைகளில் இறங்கி வருதல். அதாவது, கர்த்தருக்கு சித்தமாயிருந்து, என் தொண்டை மோசமாகாமல் போனால். இப்பொழுது... எங்களுக்காக ஜெபியுங்கள். நமக்கு துவக்கத்தில் இருந்தது போல், பழமை நாகரிகம் கொண்ட ஜெபக்கூட்டம் ஒன்றை வைக்க விரும்புகிறேன். சிந்தனைகளைப் பகுத்தறிதல் எதுவுமின்றி, ஜெபம் செய்யப்பட விரும்புவோருக்கு ஜெப அட்டையை அளித்தல். நீங்கள் ஜெப அட்டையை வைத்திருக்க வேண்டும். எனவே, நீங்கள் நேரத்தோடு வாருங்கள், அப்பொழுது பில்லி உங்களுக்கு ஜெப அட்டையைக் கொடுத்து வரிசையை ஏற்படுத்த உதவியாயிருக்கும். அப்படி செய்யாமற் போனால், ஜனங்கள் வரிசையில் வந்து சேர்ந்த வண்ணமிருப்பதால், அந்த வரிசைக்கு முடிவே இல்லாமல் போய் விடுகிறது. யார் வேண்டுமானாலும் ஜெப அட்டையை பெற்றுக் கொள்ளலாம். ஜெப வரிசை நகர்ந்து செல்லும் போது, சகோ. ஜாக், முன்பு செய்வது போல், என் பக்கத்தில் நிற்க வேண்டுமென்றும், பில்லி பாலுக்குப் பதிலாக சகோ. ப்ரவுன் ஜனங்களை என்னிடம் கொண்டு வர வேண்டுமென்றும் விரும்புகிறேன். நான் பழமை நாகரீகம் கொண்ட ஜெப வரிசையை விரும்புகிறேன். அநேக ஆண்டுகளுக்கு முன்பு நாம் செய்தது போல, அவர்களுக்காக நாம் ஜெபிக்க மாத்திரம் செய்வோம். 20இன்றிரவு வேறொரு கூட்டாளி சகோதரர் நம்முடன் கூட இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் சுற்றிலும் பார்த்த போது, சில நிமிடங்களுக்கு முன்பு அவரைப் பார்த்து, அடையாளங் கண்டு கொண்டேன். சகோ. கார்டன் லிண்ட்சே அவர் பழைய காலத்தவர்களில் ஒருவர், எங்களுடன் நீண்ட காலமாக இருந்து வருகிறார். அவர் பெரிய பணியைச் செய்து வருகிறார், அச்சிடுதல், அவர் இப்பொழுது ஏழு சபை காலங்கள் என்னும் புத்தகத்தை அச்சிடுகிறார். அது விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன், ஏழு முத்திரைகள். அதை அச்சடிக்கும் முன்பு அவர் படிக்க நேர்ந்தால், எங்களிடையே வேத சாஸ்திர பிரகாரமான தர்க்கம் உண்டாகும். அது வருவதை நான் உணருகிறேன். ஆனால், நான் வேத பண்டிதன் அல்ல என்று அவருக்குத் தெரியும். எனவே... நாங்கள் நாளை இரவை எதிர் நோக்கியிருக்கிறோம். சகோ. லிண்ட்சே, நாளை இரவு இங்கிருக்க நேர்ந்தால், பழமை நாகரீகம் கொண்ட ஒரு ஜெபக் கூட்டத்துக்காக மேடை மேல் வந்து எங்களுடன் கூட இருங்கள். பழைய காலத்து ஜெபக் கூட்டத்தை காண எத்தனை பேருக்கு விருப்பம், ஜனங்களை மேலே கொண்டு வருதல்? அது மிகவும் நல்லது. அப்படியானால், வியாதிப்பட்டவர்களையும், துன்பப்படுகிறவர்களையும் அந்த நோக்கத்துக்காக நாளை இரவு கொண்டு வாருங்கள். 21இப்பொழுது, நீங்கள் யோபின் புத்தகத்துக்கு திருப்பியிருப்பீர்களானால், 42ம் வசனம்... 42ம் அதிகாரம், முதல் ஆறு வசனங்கள்; மிகவும் வினோதமானது. சகோ. டெட்டட்லி, இன்றிரவு பீனிக்ஸில் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பீர்களானால், ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பு நாம் பேசிக் கொண்டிருந்த போது. இதை நான் குறிப்பிட்டது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அப்பொழுது நான் உங்களிடம், ''ஒரு நாள் இது என் பிரசங்கத்துக்கு பொருளாக இருக்கும்'' என்று சொன்னேன். இன்றிரவு அதை பொருளாக உபயோகிக்க எத்தனித்துள்ளேன். அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: (இதை படிக்கும் போது, கூர்ந்து கவனியுங்கள்) தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன். நீர் எனக்குச் செவி கொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்வி கேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும். என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். யோபு;42:1-6 இப்பொழுது நம் வசனத்திலிருந்து என் பொருளைத் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். என் காதினால் உண்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. கர்த்தர்தாமே தமது வார்த்தையை ஆசிர்வதிப்பாராக. 22யோபின் வாழ்க்கையை சிறிது கவனிப்போம். யோபு ஒரு தீர்க்கதரிசி. வேதாகமம் எழுதப்படுவதற்கு முன்பிருந்த காலத்தில் அவன் வாழ்ந்தான். யோபின் புத்தகம் வேதாகமத்திலுள்ள மிகப்பழைய புத்தகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில், அது ஆதியாகமம் எழுதப்படுவதற்கு முன்பே எழுதப்பட்டது. இந்த மகத்தான ஆவிக்குரிய போர்ச்சேவகனும், தீர்க்கதரிசியுமாகிய யோபு, தன் காலத்தில் வல்லமையுள்ளவனாக விளங்கினான். அவன் நல்ல வளர்ப்பில் வளர்க்கப்பட்டு, தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தரைச் சேவித்தான் என்பதில் சந்தேகமேயில்லை. அவன் மிகவும் தீரமான வாழ்க்கை வாழ்ந்த காரணத்தாள், எல்லோரும் அவனுக்கு மரியாதை செலுத்தினர். ஆனால், அவன் கர்த்தரால் சோதிக்கப்படுதல் என்று அவன் அழைக்கும் அந்த கட்டத்தை அடைந்தான். ஆனால் நான், ''பரிட்சிக்கப்படுதல்'' என்னும் வார்த்தையை உபயோகிக்க விரும்புகிறேன். உண்மையாகவே, ''தேவனிடத்தில் சேரும் ஒவ்வொரு புத்திரனும் முதலில், பரீட்சிக்கப்பட்டு, சிட்சிக்கப்பட்டு, பிள்ளை - பயிற்சி அளிக்கப்பட வேண்டும்''. அப்படிப்பட்ட பரீட்சை கடினமாகும் போது - அது கடினமென்று நாம் நினைத்து, அதற்கு செவிகொடாமல் (அதை கவனிக்காமல்) விட்டுவிடும் போது - நாம் வேசிப்பிள்ளை, தேவனுடைய பிள்ளை அல்ல என்கிறார், (எபி;12:8). ஏனெனில், எந்த ஒன்றும் உண்மையான, மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளையை தன் தகப்பனிடமிருந்து பிரிக்காது, பாருங்கள், அவன் அவருடைய பாகமாயிருக்கிறான். நீங்கள் அதை மறுதலித்தால், உங்களையே மறுதலிக்கிறவர்களாயிருப்பீர்கள். பாருங்கள், உங்களுக்கு அனுபவம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் அதற்கென்று பழக்குவிக்கப்பட்டு, பரீட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். 23இந்த மனிதன் தீர்க்கதரிசியாயிருந்த காரணத்தால், தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்ள அவனுக்கு வாய்ப்பிருந்தது. ஆனால் யோபுக்கு படிக்க வேதாகமம் இல்லை, அவன்.... வேதாகமம் அப்பொழுது எழுதப்படவில்லை. ஆனால் வெளிப்பாட்டின் மூலமாகவும், தரிசனங்களின் மூலமாகவும் அவனுக்கு தேவனை அடையும் வாய்ப்பிருந்தது. அது வேதாகமம் எழுதப்படுவதற்கு முன்னால். இப்பொழுது நாம் காண்கிறோம், அவனுடைய வாழ்க்கையை சிறிது எடுத்துக் கொண்டால், தேவன் அவனை ஆசிர்வதித்து அவனை ஒரு பெரிய மனிதனாக்கினார், எல்லோருமே அவனுக்கு மரியாதை செலுத்தினர், அவனுடைய ஞானம் மிகப் பெரிதாயிருந்தது. அவன் தேவனிடத்திலிருந்து பெற்ற வெளிப்பாடு, அவன் தேவனுடைய ஊழியக்காரன் என்பதை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தினதால், அவன் சொல்வதைக் கேட்க ஜனங்கள் எல்லாவிடங்களிலுமிருந்தும் வந்தனர். அப்பொழுது சாத்தான், அந்த மனிதனைக் குற்றப்படுத்தத் தொடங்கினான். அவன் தேவனால் ஊக்குவிக்கப்படும் ஒவ்வொரு ஊழியக்காரனையும் அவ்வாறே செய்கிறான்; அவன் தவறான ஒன்றைச் செய்யும் போது, அவனைக் குற்றப்படுத்த சாத்தான் எப்பொழுதும் அங்கிருக்கிறான். அவனுடைய வாழ்க்கையில் நேர்ந்த சோதனைகளையும், அவனுடைய மகத்தான விசுவாசத்தையும் நாம் காண்கிறோம். இயேசுவும் கூட இவ்வுலகில் வந்த போது, ''யோபின் பொறுமையைக் குறித்து நீங்கள் படித்ததில்லையா?'' என்றார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை நிறைவேற விசுவாசம் பொறுமையோடு காத்திருக்கிறது. 24இங்கு நாம் காண்கிறோம். யோபு சோதனைகளையும், துன்பங்களையும் அனுபவித்த பின்பு... அவனுக்கு ஒரு அருமையான குடும்பம் இருந்தது, அவர்கள் அவனிடமிருந்து எடுக்கப்பட்டனர். அவனுக்கு நல்ல ஆரோக்கியம் இருந்தது, அது அவனிடமிருந்து எடுக்கப்பட்டது. இந்த வாழ்க்கையில் அவன் சொந்தமாகப் பெற்றிருந்த எல்லாமே எடுக்கப்பட்டன. அவன் சாம்பல் குவியலில் உட்கார்ந்து கொண்டு, ஒரு ஓட்டை எடுத்து, தன் பருக்களை சுரண்டினான். அவனுடைய மனைவியும் கூட அவனுக்கு விரோதமாகப் பேசி, ''தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்'' என்றாள். அவன், ''நீ பயித்தியக்காரி பேசுகிறது போலப் பேசுகிறாய். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்'' என்றான். 25சாத்தான் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றான். அவனால் தேவனுடைய சந்நிதிக்கு வந்து எக்காலத்தும் கிறிஸ்தவர்களை (அல்லது விசுவாசிகளை) குற்றப்படுத்த முடியும். எனவே, அவன் அநேக காரியங்களில் யோபைக் குற்றப்படுத்தினான். அவன், ''யோபு தேவனைச் சேவிக்கும் காரணமே, எல்லாமே அவனுக்கு நன்மையாக இருந்து வந்துள்ளது. நீர் மாத்திரம் அவனை என் கையில் கொடுப்பீரானால் அவன் உம்மை முகத்துக்கு நேராக சபிக்கும்படி செய்வேன்'' என்றான். ஒரு விசுவாசியின் மேல் தேவன் வைத்துள்ள நம்பிக்கையை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். பாருங்கள்? அவன் வேறுவிதமாக கூறினால், தேவன் யோபிடம்... அல்லது, தேவன் சாத்தானிடம் இவ்வாறு கூறினார்; ''உன்னால் அப்படி செய்ய முடியாது. அவன் நீதிமான் (நீதிமானாக்கப்பட்டவன்). அவன் நல்லவன். அவனைப் போல் பூமியில் ஒருவனும் இல்லை. ''ஓ, அவன் எப்படிப்பட்ட மனிதனாக இருந்திருப்பான்!'' தேவனே தமது சத்துருவினிடம், ''என் ஊழியக்காரன் பரிபூரணமானவன், அவனைப் போல் பூமியில் ஒருவனும் இல்லை'' என்கிறார். ஒ, நாமும் அந்த மனிதனைப் போல் இருக்க முடிந்தால்! தேவன் அப்படிப்பட்ட நம்பிக்கையை வைக்கும் அளவுக்கு நாம் இருப்போமானால்! அவருடைய வார்த்தையையோ அல்லது அவரையோ நாம் திரிக்க மாட்டோம் என்று அவர் அறிந்திருப்பாரானால்! அதில் அப்படியே நிலைத்திருங்கள். அப்பொழுது அவர் தமது நம்பிக்கையை நம்மேல் வைப்பார். 26யோபு தேவனுடைய கட்டளைகளை ஒரு எழுத்தும் பிசகாமல் அப்படியே நிறைவேற்றினான். சாத்தானுக்கு அது தெரியும். அவன், ''அவனை மாத்திரம் என்னிடம் கொடுப்பீரானால், அவனை உமது முகத்துக்கு நேராக சபிக்கும்படி செய்வேன்'' என்றான். எனவே தேவன் அவனிடம், அவன் உன் கையிலிருக்கிறான், அவனுடைய பிராணனை மாத்திரம் எடுத்துக்கொள்ளாதே'' என்றார். அதிலும் கூட சாத்தான் தன்னால் இயன்ற அளவுக்கு செய்தான். அவனுடைய நண்பர்களையும், அவனுக்கிருந்த எல்லாவற்றையும், ஏறக்குறைய அவனுடைய வாழ்க்கையில் இருந்த அனைத்துமே அவன் எடுத்துக் கொண்டான். ஆனால் கொள்ள முடியவில்லை, ஆயினும் யோபு அப்பொழுதும் உறுதியாய் நின்றான், அவன் பின் வாங்கவில்லை. பாருங்கள், ஒரு மனிதன் ஒருமுறை, ''தேவன் இருக்கிறார்'' என்னும் உண்மையான, வெளிப்படுத்தப்பட்ட விசுவாசத்துடன் தேவனுடன் உண்மையாக தொடர்பு கொண்ட பிறகு, எந்த ஒன்றும், எந்த நேரமும், எந்த இடமும் அவனை தேவனிடமிருந்து பிரிக்க முடியாது. பவுல் இப்படி கூறினான் என்று நினைக்கிறேன். ''உபத்திரவமோ, துன்பமோ, பசியோ, நாசமோசமோ, மரணமானாலும், ஜீவனானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்க மாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்'' (ரோமர்;8:3639). நீங்கள் பாதுகாப்பாக அவரில் நங்கூரமிடப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில், அந்த ஜீவனுக்காக நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். 27ஆனால் அவனைச் சற்று திரித்து, கையில் விலங்கிட்டு, அவனைச் செய்ய வைக்கலாமென்று சாத்தான் எண்ணினான். ஆனால் பாருங்கள், தேவன் யாரென்றும், தேவன் அவனை எவ்வளவாக நேசிக்கிறார் என்னும் தேவனைக் குறித்த பரிபூரண வெளிப்பாட்டை யோபு பெற்றிருந்ததால், அவன் காத்திருந்தான். சூழ்நிலை என்னவாயிருந்த போதிலும், அவனுடைய விசுவாசம் ஊர்ஜிதப்படுவதற்கு அவன் காத்திருந்தான். ஏனெனில், அவன் தேவனைப் பற்றிக் கொண்டிருந்தான், ஒரு வெளிப்பாடு (நேற்று இரவு அதைக் குறித்து பேசினேன்). கட்டிடத்திலுள்ள வியாதியஸ்தர், ஊனமுற்றோர், அல்லது தேவன் அவசியமாயுள்ள நீங்கள்; ''நீங்கள் நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறீர்கள்'' என்னும் வெளிப்பாட்டை பெற்றவர்களாக, நீங்கள் அவரிடத்தில் கேட்கும் காரியங்கள் நியாயமானவை என்றறிந்து, அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலனளிக்கிறவர் என்று விசுவாசிப்பீர்களானால், உங்களில் நங்கூரமிடப்பட்டுள்ள அந்த விசுவாசத்திலிருந்து ஒன்றுமே உங்களைப் பிரிக்க முடியாது. பாருங்கள்? ஆனால் முதலாவதாக, அது உங்களுக்கு வெளிப்பட வேண்டும். 28அண்மையில் ஒரு கூட்டம் பேர் என்னிடம் வந்து கூறினர். அவர்களில் சிலர் இன்றிரவு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் நான், ''கென்டகிக்குச் செல்லுங்கள், அங்கு எண்ணெய் உள்ளது'' என்று கூறிக் கொண்டேயிருந்தேன். அங்கு எண்ணெய் உள்ளதென்று எனக்குத் தெரியும். அதை நான் தரிசனத்தில் கண்டேன். நல்லது, சகோ. டீமாஸ் மற்றவர்களும் நீண்ட காலமாக செல்லவேயில்லை. பிறகு முடிவில், அவர்கள்... (டெக்ஸாஸ் நிர்வாகம் அங்கு சென்ற பின்பு)... அவர்கள், ''இப்பொழுது நாங்கள் போகிறோம்'' என்றனர். நான், ''நீங்கள் நீண்ட காலத்துக்கு முன்பே சென்றிருக்க வேண்டும்'' என்றேன். அவர்கள் அப்படி செய்யவில்லை. டீமாஸ், சகோ. பிரான்ஹாமே, ''அப்படி செய்யாததனால் பெருந்தவறு செய்து விட்டேன்'' என்றார். ''நீங்கள் அப்பொழுதே போயிருந்தால், எல்லாவற்றையும் பெற்றிருப்பீர்கள்'' என்றேன். அவர்கள் அதற்கு செவி கொடுக்கவில்லை. முதலாவதாக... அன்றிரவு நாங்கள் அவ்விடம் விட்டுச் செல்லும் முன்பு (நாங்கள் பகல் உணவு அருந்தின இடம்), பரிசுத்த ஆவியானவர் பூமியில் ஒரு பெரிய பிளவை எனக்குக் காண்பித்தார். அதில் எண்ணெய் நிறைந்திருந்தது. கென்டக்கியில் மேலே வந்து கொண்டிருப்பது எண்ணெய் உள்ள சிறு படிவங்கள். அதிலிருந்து அவர்கள் 'பம்ப்' செய்து எண்ணெயை எடுக்கின்றனர். ஆனால், இதுவோ மூல ஊற்றிலிருந்து வந்த எண்ணெய். நான், சகோ. டீமாஸ், ''அது அங்குள்ளது'' என்றேன். அவர்கள் அதை தேடிக் கொண்டு சென்றனர். அவர்கள் அங்கு சென்று, ''எண்ணெய் கிணறு எங்கே உள்ளது என்று எங்களுக்கு சொல்லும்'' என்றனர். நான், ''ஓ. முடியாது! என்றேன், முடியாது! முடியாது!'' 29பாருங்கள், தேவனுடைய வரத்தை நாம் வர்த்தகத்துக்காக உபயோகிப்பதில்லை. இல்லை! இல்லை! அது எங்குள்ளதென்று அவரால் என்னிடம் கூற முடியும். ஆனால் அது எனக்கு தேவையில்லை. அவரைக் கேட்பதற்கு கூட எனக்கு போதிய விசுவாசம் இராது. பாருங்கள்? அது எனக்குத் தேவையாயிருக்குமானால், அவரை நான் கேட்டால், அவர் என்னிடம் கூறுவார் என்னும் நம்பிக்கை எனக்குண்டு. ஆனால் முதலாவதாக, பாருங்கள், உங்கள் நோக்கங்களும், குறிக்கோள்களும் சரியாயிருக்க வேண்டும். அதற்கு காரணங்களை நீங்கள் உடையவர்களாயிருக்க வேண்டும். நீங்கள் கேட்பதனால் தேவன் அதை உங்களுக்கு கொடுக்க மாட்டார். அதற்கான உண்மையான நோக்கம் இல்லாமல், அது தேவனுடைய சித்தத்தின்படி இல்லாமல், உங்களால் விசுவாசித்து கேட்க முடியாது. எனவே நீங்கள் சுகமாயிருக்க வேண்டுமென்றால், எதற்காக நீங்கள் சுகமாயிருக்க வேண்டும்? நீங்கள் சுகமாக்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் சுகமாக்கப்பட்ட வேண்டுமென்று விரும்பும் காரணம் என்ன? நீங்கள் தேவனிடம் என்ன கூறுகின்றீர்கள்? நீங்கள் சுகமடைந்த பின்பு, உங்கள் வாழ்க்கையை குறித்து என்ன செய்யலாம் என்றிருக்கிறீர்கள்? பாருங்கள்... நீங்கள் ஒரு நோக்கத்தையும், குறிக்கோளையும் உடையவர்களாயிருக்க வேண்டும். அவை தேவனுடைய சித்தத்தின்படி சரியாயிருக்க வேண்டும். பிறகு அந்த விசுவாசம் உங்களுக்கு வெளிப்படுமானால், தேவன் தம்முடைய இராஜாதிபத்திய கிருபையினால் அந்த விசுவாசத்தை அங்கு வைக்கிறார், பிறகு எல்லாம் முடிவு பெறுகிறது. பாருங்கள்? இப்பொழுது பார்த்தீர்களா? 30அந்த வார்த்தை உண்மையென்று காண்பிக்க, அந்த சகோதரர் அங்கு சென்ற போது, அவர்கள் வாங்கினர். ஒருவர் அங்கு சென்று சில இடங்களை வாங்கி, அவைகளை குத்தகைக்கு விற்று, மற்றவரை இப்படி ஏமாற்றினார். நான், ''பாருங்கள், அது நடக்காது'' என்றேன். ஆனால் தீர்க்கதரிசனத்தை உறுதியாக்க இந்த மனிதர்கள், தோண்டிக் கொண்டிருந்த கிணற்றிலிருந்து நூறு கெஜம் தூரத்திற்குள் வேறு மனிதர்கள் பீச்சிக் கொண்டு வெளிவரும் ஒரு பெரிய எண்ணெய் ஊற்றை கண்டு பிடித்தனர். அது அங்குள்ளது, அரை நாளில் அது ஆயிரத்து நூறு பீப்பாய் எண்ணெய் தருகின்றது. அதுபோன்று எத்தனையோ பிப்பாய்கள். அது இன்னமும் தந்து கொண்டிருக்கிறது, அந்த மூல ஊற்றிலிருந்து. அந்த தீர்க்கதரிசனம் அது அங்குள்ளது என்று கூறப்பட்ட அந்த வார்த்தையின்படியே, அது அங்கிருந்தது. மற்ற கிணறுகள் அனைத்துமே, கென்டக்கியில் எல்லாவிடங்களிலும் உலர்ந்து விட்டன. அவை சிறு குளங்கள். அவர்கள் சிறிது காலம் 'பம்ப்' செய்து எண்ணெய் எடுத்தவுடன் அவை போய்விடுகின்றன. அவை மூல ஊற்றிலிருந்து வெளியே ஊற்றப்படுபவை (overflows). பாருங்கள்? 31சுயநலம் அவர்கள் மத்தியில் நுழைந்த காரணத்தால், அவர்களுடைய குறிக்கோள்கள் தவறாகிவிட்டன. ''அது இப்படித்தான் இருக்கும்'' என்று எண்ணி, அவர்கள் கையொப்பமிட்டு சில இடங்களை குத்தகைக்கு எடுத்தனர். அவர்கள் தேவனுடைய ராஜ்யத்துக்காக செய்வதாக வாக்களித்த போதிலும், அது அவர்களுக்காகவே என்பது போல் காணப்பட்டது. பாருங்கள்? அது நடக்காது, சுயநலமுள்ள எந்த ஒரு செயலும் பயன்தராது. உங்கள் நோக்கங்களும், குறிக்கோள்களும் சரியாகி, பிழையின்றி அமைந்திருக்க வேண்டும். அப்பொழுது உங்களுக்கு விசுவாசம் உண்டாயிருக்கும். நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தைரியம் (நம்பிக்கை) கொண்டிருக்கிறோம். (1.யோவான்;3:21). பாருங்கள்? பாருங்கள், நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ''தேவனுடைய கனத்துக்காகவும், மகிமைக்காகவும் இது எனக்கு வேண்டும். அப்பொழுது விசுவாசம் நகர்ந்து செல்வதற்கு ஒரு வாய்க்கால் கிடைக்கின்றது. இல்லையென்றால், உங்களுக்கு அறிவு சம்பந்தமான, புத்தியில் எழுந்த விசுவாசமே (intellectual faith) இருக்குமேயன்றி, தேவனிடத்திலிருந்து வரும் உண்மையான விசுவாசம் இருக்காது. புத்தியில் எழுந்த விசுவாசம் உங்களை எங்கும் கொண்டு செல்லாது. ஒருக்கால் அது உங்களை உணர்ச்சி வசப்பட செய்யலாம், ஆனால் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சுகத்தை அது தராது. 32எனவே யோபு, தேவன் தனக்கு அளித்திருந்த அந்த உண்மையான விசுவாசத்தைக் கொண்டு தன்னை சோதித்து பார்த்து, அவன் “நீதிமான்” என்றும், அவன் செய்ய வேண்டும்மென்று தேவன் விரும்பினவை அனைத்தும் அவன் செய்து முடித்திருந்தான் என்றும் அறிந்து கொண்டான். நமது வியாதிக்காக நாம் ஜெபிக்கப்படவிருக்கும் இந்நேரத்தில், நாம் செய்ய வேண்டுமென்று தேவன் விரும்பும் அனைத்தையும், நாம் செய்திருக்கிறோமா என்று வியப்புறுகிறேன். நாம் வேதத்தின் ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றியுள்ளோமா? நமது இருதயங்களையும், வாழ்க்கையையும் அவருடைய சேவைக்காக அர்ப்பணித்துள்ளோமா? நீங்கள் சுகமடைய வேண்டுமென்று விரும்பும் காரணம் என்ன? நீங்கள் சுகம் பெற உங்களுக்கு போதிய விசுவாசம் இல்லாததன் காரணம், ஒருக்கால் இதைக் குறித்து நீங்கள் உத்தமமாக உங்கள் இருதயத்திலிருந்து தேவனிடம் கூறாமல் இருக்கக்கூடும். எசேக்கியா தேவனிடம் காரணத்தை கூறினான். அவன் தன் ராஜ்யத்தை ஒழுங்குபடுத்த எண்ணினான். எனவே தேவன் தமது தீர்க்கதரிசியை மறுபடியும் அனுப்பி, அவன் சுகமடைவான் என்று அவனிடம் கூறினார். பாருங்கள்? அப்படிப்பட்ட காரியங்களை நீங்கள் முதலாவதாக சரி செய்துகொள்ள வேண்டும். எனவே நீங்கள் இந்த நிலையையடைந்து, நீங்கள் இதை செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்னும் வெளிப்பாட்டை தேவனுடைய வார்த்தையின் மூலமாக நீங்கள் பெற்று அறியும் போது, உங்களுக்கு உண்மையான விசுவாசம் உண்டாகின்றது. 33ஆபிரகாமைப் போல். அவனுக்கு தொண்ணூற்றொன்பது வயதான போது (அது ஆதியாகமம் 17 என்று நினைக்கிறேன்), தேவன் இந்த கிழவனுக்கு பிரத்தியட்சமானார். அவனுக்கு தொண்ணூற் றொன்பது வயதான போது ஏறக்குறைய நூறு வயதான போது. அத்தனை ஆண்டு காலமாக, அந்த வாக்குத்தத்தம் நிறைவேறு வதற்காக அவன் காத்துக் கொண்டிருந்தான். அவர் ''எல்ஷடாய்'' என்னும் நாமத்தில் அதாவது, ''மார்பகம் கொண்டவர்'' என்னும் நாமத்தில் அவனுக்கு பிரத்தியட்சமானார். அது எத்தகைய உற்சாகம் அளிந்தது! இருப்பினும், அப்பொழுது வாக்குத்தத்தம் நிறைவேறவில்லை. அவர், ''ஆபிரகாமே, நான் சர்வ வல்லமையுள்ள தேவன், எல்ஷடாய், பெலன் கொடுப்பவர், மார்பகம் கொண்ட தேவன்'' என்றார். 34நான் உங்களுக்கு முன்பு கூறினது போல். ஒரு சிறு குழந்தை வியாதிப்பட்டு எரிச்சலுண்டாகி அழும்போது, அது தாயின் மார்பகத்தின் மேல் கிடக்கிறது. அது பாலுண்ணும் போது, அதன் பெலனை அவளிடமிருந்து பெறுகின்றது. ஏனெனில், பாலுண்பதன் மூலம் அது திருப்தியடைகின்றது. அது போகக்கூடிய ஒரே இடம் தாயின் மார்பகமே என்று அது அறிந்துள்ளது. அதற்கு மருந்தைக் குறித்து எதுவும் தெரியாது. நீங்கள் அவனுக்கு மருந்தை வாயில் ஊற்றலாம், அவன் அழுவான். அவனுக்கு கையில் ஊசி போட்டாலும், அவன் அழுது கொண்டேயிருப்பான். ஆனால், அவனைத் திருப்திபடுத்தக்கூடிய ஒரே இடம், தாயின் மார்பகமே. 35அவர் ஆபிரகாமே, உனக்கு வயதாகி விட்டது, உன் பெலன் போய்விட்டது. உன் கரங்கள் தளர்ந்துவிட்டன, உன் ஆண்மைத்துவம் போய்விட்டது, ஆனால் நான் உனக்குத் தாய். என் வாக்குத்தத்தத்தை இறுகப்பற்றிக் கொள். நீ காத்திருக்கும் போது, திருப்தி கொண்டிரு. ''நீ இளைப்பாறு'' என்றார். ஒவ்வொரு விசுவாசியும் கடைபிடிக்க வேண்டிய முறை அதுவே. நீ எவ்வளவு மோசமாக புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்தாலும், சக்கர நாற்காலியில் எவ்வளவு காலமாக உட்கார்ந்து கொண்டிருந்தாலும், இப்படிப்பட்டவை என்ன நேரிட்டிருந்தாலும், நீ மாத்திரம் தேவனிடமிருந்து, வரும் அந்த வெளிப்பாட்டை கிரகித்துக் கொள்ள முடியுமானால்! அது நிறைவேறும் என்னும் உறுதியுடன் திருப்தி கொண்டிரு. ஏனெனில், வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்காக விசுவாசம் பொறுமையுடன் காத்திருக்கிறது. பாருங்கள்? 36யோபு தான் சரியென்று அறிந்திருந்தான். நாம் இங்கு வேதத்தில் காண்கிறோம்.... இந்த ஆசாமிகள் அவனிடம் வருகின்றனர் (சபை அங்கத்தினர்கள்). அவனுக்கு ஒரு காலத்தில் அருமையாயிருந்தவர் அனைவருமே அவனுக்கு விரோதமாக எழும்பி, இவையாவும் அவனுக்கு சம்பவித்த காரணத்தால் அவள் ஒரு இரகசிய பாவி என்று அவனைக் குற்றப்படுத்தத் தொடங்கினர். இன்றைக்கும் ஜனங்கள், ''நான் சொன்னேன் அல்லவா? அவனைப் பாருங்கள்! அவனுக்கு என்ன நேர்ந்ததென்று பாருங்கள்'' என்று கூறுவதை நீங்கள் கேட்கிறீர்கள். அது முற்றிலும் உண்மையல்ல. அது சில நேரங்களில் தேவன் தமது ஜனங்களை பரீட்சிப்பதாகும். இந்த விஷயத்தில் தேவன், யோபை பரீட்சை பார்த்தார். அக்காலத்தில் அவனே உலகில் தலை சிறந்த மனிதன். அவர் அவனை தமது கரங்களில் கொண்டிருந்தார். ஏனெனில், யோபு தேவனிடமிருந்து தரிசனம் பெற்ற ஒரு தீர்க்கதரிசியென்றும், தேவன் அவனிடம் கூறினதை அவன் அப்படியே செய்தான் என்பதையும் தேவன் அறிந்திருந்தார். தேவன் தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற அவனுக்கு கடமைபட்டவராயிருந்தார். 37ஓ! எல்லா கிறிஸ்தவர்களும் அப்படி இருக்க வேண்டும். நமது வாழ்க்கையில் கடைசி போராட்டம் நேரிட்டு, மரணம் நமது தொண்டையைப் பிடிக்கும் போதும், நாம் உறுதியாக நின்று, ''நான் உன்னைக் கடைசி நாளில் எழுப்புவேன்'' என்று அவர் கூறியுள்ள வாக்குத்தத்தத்தை நாம் நினைவு கூர வேண்டும், பாருங்கள்? அதை நாம் இறுகப்பிடித்துக் கொள்ள வேண்டும். நமது சாட்சியை, நாம் கிறிஸ்துவில் கொண்டுள்ள ஸ்தானத்தை நாம் என்னவாயிருக்கிறோம் என்பதை நாம் அறிந்தவர்களாய் இருக்க வேண்டும்; முக்கியமாக, அவருடைய கட்டளைகளின் ஒவ்வொரு வார்த்தையையும், நாம் கைக்கொண்டு வந்திருக்கிறோம் என்று நாம் அறிந்திருக்கும் போது. ''அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு உள்ளே பிரவேசிக்க உரிமையுண்டு.'' பாருங்கள்? யார் என்ன கூறின போதிலும், நாம் வேதத்தில் காணும் அவருடைய ஒவ்வொரு கட்டளையையும், அவர் நாம் செய்யக் கூறியுள்ள யாவையும் வேதாகமத்தை எழுதின நமது சிருஷ்டி கர்த்தரின் பேரில் நாம் பயபக்தியும், அன்பும், மரியாதையும் கொண்டவர்களாய் அதை கைக்கொண்டு வந்திருக்கிறோம் என்று நாம் அறிந்திருப்போமானால்! ''மனிதர் வேதாகமத்தை எழுதினார்கள்'' என்று நாம் சொல்லுகிறோம். ''தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு வேதாகமத்தை எழுதினார்கள்'' (2.பேது;1:21) பாருங்கள்? தேவன் மனிதர் மூலமாய் அதை எழுதினார். ஒரு தீர்க்கதரிசி அவருடைய வார்த்தையை உரைப்பது போல். அது தீர்க்கதரிசியின் வார்த்தையல்ல, தீர்க்கதரிசியின் மூலமாய் உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை. அதனால் தான், அது நிறைவேற வேண்டும் அவன் உரைத்தது உண்மையாக தேவனுடைய வார்த்தையாயிருக்குமானால். 38நாம் இந்த பெரிய மனிதனைக் காண்கிறோம். யோபு படிப்பதற்கு அவன் காலத்தில் வேதாகமம் இருக்கவில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இல்லை! அவன் தேவனுடைய ஆவியின் ஏவுதலின் பேரிலேயே நடந்து வந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசி. அவனிடம் தேவனுடைய வார்த்தை வந்தது. அவன் தேவனுடைய ஆவியினாலே ஏவப்பட வேண்டியவனாயிருந்தான். அவன் தேவனுடைய திர்க்கதரிசி என்னும் தன் ஸ்தானத்தை அறிந்திருந்தான். நிகழ வேண்டிய ஒன்றே ஒன்று, தேவனுடைய ஆவி அவனை ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுது அவன் கூறுபவை அனைத்தும் நிறைவேறும் என்பதை அவன் அறிந்திருந்தான். ஏனெனில், தேவனுடைய ஆவியின் ஏவுதலின் பேரில் அவை கூறப்பட்டன. அது தான் சபை: அது தன் ஒழுங்கில் அமைக்கப்பட்டிருக்குமானால், அதன் இயங்கு பாகங்கள் (mechanics) ஆயத்தமாயுள்ளன. அதற்கு தேவையானது இயக்கு சக்தி (dynamics) மாத்திரமே. இன்றிரவு நாம் நமது இயங்கு பாகங்களை ஆயத்தமாக்குவோமானால், நாம் புரியும் செயல்களில் நமது இருதயத்தை நேராக்கி ஒவ்வொரு வார்த்தையையும் பின்பற்றி, ஞானஸ்நானத்தில் அவரைப் பின்பற்றி, அவர் நமக்குக் கட்டளையிட்டுள்ள ஒவ்வொரு ஒழுங்கையும் நாம் பின்பற்றி, இயங்கு பாகம் அனைத்தையும் ஆயத்தப்படுத்தி, அங்கு நிற்போமானால், இயக்கு சக்தி அனுப்பப்படுவதற்கு நாம் ஆயத்தமாயிருப்போம். தேவன் ஒருவர் மாத்திரமே, அதை அனுப்ப முடியும். அது, ''நான் சுகமடைந்து விட்டேன்'' என்னும் விசுவாசத்தை உங்கள் இருதயத்தில் போடும். அப்பொழுது சூழ்நிலை என்னவாயிருப்பினும் ஒன்றுமில்லை. நீங்கள் எப்படியாயினும் சுகமடைவீர்கள். ஏனெனில், அது விசுவாசம். விசுவாசத்தால் நீங்கள் சுகமடைகிறீர்கள். 39யோபு தேவனிடம் தொடர்பு கொள்ள ஒரு வாய்க்காலைப் பெற்றிருந்தான். அதை அவன் பரிசுத்த ஆவியின் ஊக்கத்தினால் பெற்றிருந்தான். அவன் தன்னை வெளியே அகற்றிக் கொண்டு, தேவன் உள்ளே நுழைய அனுமதிக்கும் வழியை அறிந்திருந்தான். அவன் நீதிமானாக்கப்பட்டான் என்பதை அறிந்திருந்தான். அது ஒரு வரம், அந்த வரம் ஜனங்களுக்காகவே; யோபுக்காக அல்ல, ஆனால் ஜனங்களுக்காக. எல்லா தெய்வீக வரங்களும் அப்படிப்பட்ட வைகளே. அவைகளைக் கொண்டு தேவனுடைய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். எல்லோருமே தீர்க்கதரிசியாயிருக்க கட்டளையிடப்படவில்லை, நீங்கள் எல்லோருமே வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டுமென்று கட்டளையிடப்படவில்லை. அவர்கள் எல்லோருமே போதகர்களாயிருக்க கட்டளையிடப்படவில்லை. ஆனால், அது அவர்களுக்கு தேவன் திறந்து கொடுத்த வாய்க்காலாகும். இன்று காலை நாம் படித்த பாடத்தில் பார்த்த பிரகாரம்... ஒரு மனிதன், தான் எவ்வளவு சிறப்பாக பரிசுத்த ஆவியால் ஊக்குவிக்கப்பட்ட போதிலும், அவனுக்கு மற்றொருவரின் வாய்க்காலில் பிரவேசிக்க வேண்டிய வேலையே கிடையாது. இன்று காலை எத்தனை பேர் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை நான் காணட்டும். பாருங்கள்? பாருங்கள், நீங்கள் அப்படி செய்யவே கூடாது. 40தாவீது, அவனால் முடிந்தவரை ஊக்குவிக்கப்பட்டான். ஜனங்கள் எல்லோரும் ஆர்ப்பரித்து தேவனை மகிமைப்படுத்தினர். அதற்கான காரணம் வேத ரீதியாக காணப்பட்டது. ஆனால் அவன் தவறான மனிதன். அந்த ஊக்கம் நாத்தானுக்கு வந்திருக்க வேண்டும், தாவீதுக்கு அல்ல, பாருங்கள், அவன் நாத்தானை கலந்தாலோசிக்கவுமில்லை. என்ன நடந்ததென்று பார்த்தீர்களா? பாருங்கள், நாம்.... ''தேவன் தீர்க்கதரிசிகளாகிய தமது ஊழியக்காரருக்கு ஒன்றை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்'' என்று அவரே கூறியுள்ளார், (ஆமோ;3:7). யோபு அவன் காலத்தில் தீர்க்கதரிசியாக விளங்கினான். தேவன், யோபுக்கு செய்த ஒரே காரியம் என்னவெனில்; அவனுக்கு ஞானத்தையும், வார்த்தையும் அளித்திருந்த பரிசுத்த ஆவியின் ஊக்கம் நின்றுவிட்டது, அவனுக்கு பரிசுத்த ஆவியின் ஊக்கத்தைப் பெற முடியவில்லை. அவன் தனது இயங்கு சாதனங்கள் அனைத்தும் அறிந்திருந்தான். (அவன் தகனபலி செலுத்தினான், அவன் சரியென்று அறிந்திருந்த அனைத்தும் செய்தான்). இருப்பினும், அவன் தேவனிடமிருந்து ஒரு வார்த்தையும் கூட பெறவில்லை. ஆனால், பிசாசும் அவனை அசைக்க முடியவில்லை. பார்த்தீர்களா? உங்களுக்காக ஜெபிக்கப்படும் போதும் அப்படித்தான். நீங்கள் ஜெப வரிசையில் செல்ல வேண்டும் என்றோ, அல்லது வேறு யாராவது உங்களுக்கு ஜெபிக்க வேண்டும் என்றோ அவசியமில்லை. தேவன் உங்களுக்குக் கட்டளையிட்டவைகளை நீங்கள் அப்படியே செய்திருக்கிறீர்கள் என்னும் நிச்சயத்தை உடையவர்களாய் இருப்பீர்களானால் (பாருங்கள்?) ஊக்கத்தின் வாய்க்கால் உங்களுக்குத் திறக்கப்படுவதற்காக காத்திருந்து, ''இப்பொழுது நான் சுகமடைந்து விட்டேன்'' என்று கூறுங்கள். அது அங்கு விழும்போது, எல்லாம் முடிந்து விடும். ஓ, உனக்கு ஜெப வரிசையோ, வேறு எதுவுமோ அவசியமிராது. அது முடிந்து விட்டது! அது உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது! பாருங்கள்? 41கர்த்தராகிய இயேசு இவ்வுலகில் வந்தபோது, அந்த வயோதிப தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தப்பட்டது போல், ''அவன் கர்த்தருடைய கிறிஸ்துவைக் காணும் முன்னே மரணமடைய மாட்டான்'' என்று அந்த வயோதிப தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தப்பட்டது; (லூக்;2:26). அவன் அதை விசுவாசித்து, அற்காக காத்திருந்தான். கிழவனுக்கு, பைத்தியம் பிடித்து விட்டது என்று ஜனங்கள் எண்ணினர். ஆயினும் அவன் விசுவாசித்தான்! அதனின்று அவனை ஒன்றுமே அசைக்க முடியவில்லை. தேவன் அதை அவனுக்கு வெளிப்படுத்தினார் என்பதை அவன் அறிந்திருந்தான். ''அது பரிசுத்த ஆவியினால் அவனுக்கு அறிவிக்கப்பட்டது'' என்று வேதம் கூறுகின்றது; (லூக்;2:26). சிமியோன் அந்த நிமிடத்தில் ஆலயத்துக்குள் பிரவேசித்து குழந்தையின் அருகே நடந்து சென்று, தேவனைத் துதித்து, ''ஆண்டவரே, உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர் என்றான்;'' (லூக்;2:29). அவன் குழந்தையை தன் கைகளில் ஏந்தினபோது, ''உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது'' என்றான்; (லூக்;2:32). பாருங்கள், அவன் அதைக் காணப் போகிறான் என்பதை அறிந்திருந்தான். அவன் ஒரு நாளில் எத்தனை குழந்தைகளை கண்ட போதிலும், அவன் மரிக்கும் முன்பு கிறிஸ்துவைக் காண்பான் என்று தேவன் அவனுக்கு வெளிப்படுத்தியிருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். சிமியோன் அதை விசுவாசித்தான். அவ்வாறே நீ தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றிருக்கிறாய் என்று உனக்கு வெளிப்படுமானால்; நீ கிறிஸ்தவனாயிருப்பதால். ஆவியின் ஊக்கம் உனக்கு வருமானால், உனக்கு ஜெப வரிசை கூட அவசியமில்லை. உனக்கு அவசியமான ஒன்றே ஒன்று திறந்த இருதயமாகும். இயங்கு சாதனங்கள் அனைத்தும் ஆயத்தமாயிருந்து, ஆவியின் ஊக்கம் உள்ளே நுழைய அனுமதிப்பாயானால், வேறெதுவுமே உன் மனதை மாற்ற முடியாது. நீ அதைப் பெற்று கொண்டு விட்டாய். அப்படி நீ செய்யாவிட்டால், உனக்கு ஒரு நன்மையும் உண்டாகாது. 42இப்பொழுது கவனியுங்கள், யோபுக்கு பரிசுத்த ஆவியின் ஊக்கம் என்னும் வாய்க்கால் அவசியமாயிருந்தது. அதை அவன் திறந்து வைத்திருந்தான். பரிசுத்த ஆவியின் ஊக்கத்தின் மூலம், தேவனுடன் தொடர்பு கொள்ளக் கூடிய ஒரு வாய்க்காலை அவன் பெற்றிருந்தான். அவன் தன்னை வெளியே அகற்றிக் கொண்டு, தேவனுடைய வார்த்தை உள்ளே நுழைய அனுமதிக்கும் முறையை அறிந்திருந்தான். அவனிடம் ஆலோசனை கேட்க ஜனங்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்தனர் என்பதைப் பாருங்கள். ஜனங்கள் அவனைத் தேடி வந்தனர். ஏனெனில், யோபு கூறினது உண்மையென்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அந்த மனிதன் உண்மையையே கூறினான் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஏனெனில், அவன் தீர்க்கதரிசனம் உரைத்த அனைத்தும் நிறைவேறின. எனவே, ஜனங்கள் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் அவனிடம் வந்தனர். அவன் சந்தை வெளிக்குச் செல்லும் போது, கிழக்கலிருந்து வந்த வாலிப ராஜ குமாரர்கள், அவனிடமிருந்து மகத்தான, ஞானம் நிறைந்த, ஆறுதலான ஒரு வார்த்தை கேட்பதற்கென அவனுக்கு முன்பாக பணிவார்களாம். ஏனெனில், அவன் உத்தமன் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவன் தன்னைக் குறித்து பெருமையடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவனுக்கு யாருடைய ஆதரவும் அவசியமில்லை, அவன் தேவனுக்கு முன்பாக உத்தமமான தீர்க்கதரிசியாக விளங்கினான். அவர்கள் அவன் மேல் நம்பிக்கை வைத்திருந்தனர். அவன் சொல்வதைக் கேட்க ஜனங்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்ததாக வேதம் கூறுகின்றது. ஆனால் பாருங்கள், இவையாவும் அவனுக்கு நேரிடக் காரணமென்ன என்பதை விளங்கிக் கொள்ள அவனுக்கு பரிசுத்த ஆவியின் ஊக்கம் கிடைக்கவில்லை. அவ்வாறு நேரிட தேவன் அனுமதித்தார், அவர் அவனிடம் கூறவில்லை. 43பிறகு ஒரு நாள், நாம் காண்கிறோம். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரைக்கும், எல்லோருமே ''சரியென்று'' சொல்லி போய் விடுவார்கள். ஆனால் உங்களுடன் இணங்கக் கூடாது என்று அவர்கள் எண்ணும் போது, தொல்லை ஆரம்பித்து விடுகிறது. யோபு மாத்திரமே அவன் சரியென்பதை அறிந்திருந்தான். தேவன் அவனுடன் பேசுவதைக் கேட்டு, அவனுக்கு விசுவாசத்தின் துடிப்பு உண்டானது. அது உண்மையென்று அவன் அறிந்திருந்தான். ஆம், ஐயா! அவன் தேவனுடைய சத்தத்தை அறிந்திருந்தான். யாருமே அவனை ஏமாற்ற முடியாது. ஏனெனில், அவனுக்கு அது நன்றாகத் தெரியும். அது... எப்பொழுதாவது - நீங்கள்... ஏதாவது ஒன்று உங்களுக்கு வெளிப்பட்டு, அது ஜனங்களின் கருத்துக்கு முரணாயிருக்குமானால்... நான் தீர்க்கதரிசிகளின் வரிசையில் இருந்து கொண்டு பேசுகிறேன். தேவன் ஒன்றை வெளிப்படுத்தி, தேவனிடமிருந்து வந்த அந்த இரகசியம் ஜனங்களுக்கு அறிவிக்கப்பட வேண்டுமானால், அது வேத பள்ளிகளின் மூலமாகவோ, அல்லது ஒரு கூட்டம் ஜனங்களின் மூலமாகவோ வராது. அது அப்படி வந்ததே கிடையாது. அது எப்பொழுதுமே ஒரு தனிப்பட்ட நபரின் மூலமாக ஒரு தீர்க்கதரிசியின் மூலமாக வரும். ஆமோஸ்;3:7, ''தேவன் தமது தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தாமல், ஒரு காரியத்தையும் செய்யார்.'' 44யோபுக்கு ஏதோ தவறு நேர்ந்து விட்டது, அவனைக் குறித்து பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு அவனுக்கு கிடைக்கவில்லை. அது அவனைக் கலக்கமுறச் செய்தது. அப்படிப்பட்ட ஒரு சங்கடமான நிலையை நீங்கள் அடையும் போது, சத்துரு உங்கள் நண்பர் எல்லோருக்குள்ளும் நுழைந்து விடுகிறான். அவர்கள் உங்களைக் குற்றப்படுத்தத் தொடங்கி விடுகின்றனர். ஓ, யோபின் நண்பர்கள் அவனைக் குற்றப்படுத்தினது, அவனுக்கு வருத்தமுண்டாக்கின செயலாக அமைந்திருக்கும். சாத்தான் சென்று நண்பர்களுடன் சேர்ந்து கொள்கிறான். சாத்தான் தேவனுடைய சமூகத்தில் வந்து, ''அவனை என் கைகளில் கொடுத்துவிடும். அவன் உம்மை சபிக்கும்படி செய்வேன். அவன் செய்தியை மறுதலிக்கும் படி செய்வேன். அவன் உம்மை சபிக்கும்படி செய்வேன். அவன் பின் வாங்கிப்போய், 'அதெல்லாம் தவறு' என்று கூறும்படி செய்வேன்'' என்றான். பிறகு அவன் தன்னாலான வரையிலும், யோபுக்கிருந்த பெரிய மனிதர்கள், நண்பர்கள் மூலம் முயன்று பார்த்தான். ஆனால் யோபோ, கால்கள் தள்ளாடாமல் உறுதியாக நின்றான். ஏனெனில், அவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டான் என்பதை அறிந்திருந்தான். ஓ தேவனே, நாளை இரவு, ஒரு புறாவின் செட்டைகளின் மேல் என்னும் செய்தியை அளிக்க எனக்குதவி புரியும். பாருங்கள், நான் தேவனுடைய சத்தத்தைக் கேட்டேன், அது ஒன்றைக் கூறினது. அது அந்த விதமாகவே நடக்கப் போகின்றது! மற்றவை நடந்தது போலவே, அதுவும் நடக்கப் போகின்றது! 45அது நடக்கப் போகின்றது என்று யோபு அறிந்திருந்தான். அவன், ''நீதிமான்'' என்று தேவன் அவனிடம் கூறினார் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அவர்களோ, அவனை ஒரு பாவியாக்கினர். எனவே, அவன் ஆவியின் ஊக்கத்துக்காக காத்திருந்தான். சாத்தான் ஜனங்கள் எல்லோரையும் அவனிடம் அனுப்பி, அவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு... ஆறுதலளிப்பவர்கள், அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள், அவன் மேல் குற்றஞ்சாட்டினர். ஆனால், இது அவனை சிறிதளவும் அசைக்கவில்லை. தேவனுடைய வார்த்தை அவனுக்கு உறுதிப்பட்ட போது... அவனுடைய காதுகளினால் அவன் தேவனைக் குறித்து கேள்விப்பட்டிருந்தான். ஆனால் ஒருநாள், அவன் மிகவும் தாழ்ந்த நிலையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது... அவன் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த போது, எல்லோருமே அவனைக் குற்றப்படுத்தினர். அவனுடைய மனைவியும் கூட, அவன் 'தவறு' என்று அவனிடம் கூறினாள். அவன் தனது பருக்களை சுறண்டி கொண்டிருந்தான். அப்பொழுது எலிகூ அங்கு வந்து அவனுடைய சுய நலத்துக்காகவும், அவன் தேவனைக் குற்றப்படுத்தினதற்காகவும் அவனைக் கடிந்து கொண்டான். அந்த நேரத்தில் ஆவியின் ஊக்கம் அவனுக்குக் கிடைக்கப் பெற்றது. அப்பொழுது மின்னல் அடிக்கத் தொடங்கினது, இடிகள் முழங்கத் தொடங்கின. ஆவியின் ஊக்கம் தீர்க்கதரிசிக்கு கிடைத்தது. அவன் எழுந்து நின்று, ''என் மீட்பர் உயிரோடிருக்கிறார்! அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்'' என்றான்; (யோபு;19:25-27). 46அவன் பார்த்தான்... அவர்கள் மரங்களைக் குறித்தும், தாவர உயிரைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தனர். மரம் எப்படி செத்து மீண்டும் பிழைக்கிறது என்றும், தண்ணீர் அதை எப்படி பிழைக்கச் செய்கிறது என்றும், தண்ணீரின் வாசனை, ஒரு மரத்துக்கு தண்ணீர் ஊற்றுவதனால் ஏற்படும் விளைவுகள், நிலத்தடியில் சென்ற விதை போன்றவைகளைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். யோபு, ''மனுஷன் செத்தபின் ஒழிந்து போகிறான். அவனுடைய பிள்ளைகள் வந்து கனம் பண்ணுகிறார்கள். அவன் அதை உணராதிருக்கிறான். நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீரும் மட்டும் என்னை மறைத்துக் கொள்ளும். மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்பொழுது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன். நான் கடந்து போகக் கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்தார்'' என்றான்; (யோபு;14:13-15;19:18). அவன் இதையெல்லாம் அறிந்திருந்தான். ஒரு மரம் துளிர்ப்பதை அவன் கண்டான். ஆனால் மனிதன் மரிக்கும் போது என்ன நேரிடுகிறது? அவன் உயிரோடெழுந்திருப்பதில்லை. எனவே, தேவன் அந்த மீட்பரை அவனுக்குக் காண்பித்துக் கொண்டிருந்தார். 47அவனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டோ என்று அவன் காண விரும்பினான்; (யோபு;16:21). அவன் எத்தனையோ பேருக்காக வழக்காடியிருக்கிறான். ஆனால் இப்பொழுது அவனுக்காக வழக்காடுகிறவர் யாராகிலும் உண்டோ? யாராகிலும் ஒருவர் யோபு அல்லது பாவியான ஒருவன் மேலும், பரிசுத்தமுள்ள தேவனின் மேலும் தன் கரங்களைப் போட்டு அவர்களிருவரையும் இணைக்க முடியுமா? அவன் அவருடைய வீட்டுக்குச் சென்று கதவைத் தட்ட முடியுமா? அவர் கதவைத் திறந்து அவனுடன் சிறிது நேரம் பேசுவாரா? ஆனால் அப்பொழுது, ஆவியின் ஊக்கம் அவனுடைய இருதயத்துக்குள் நுழைந்த போது, அவனால் தேவனைக் காண முடிந்தது. மின்னல் அடித்தது, இடி முழங்கினது, அப்படி நேர்ந்த போது, அவன் எழுந்து நின்று, ''என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன்! என் மீட்பர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார்'' என்றான். பாருங்கள், அவனுடைய விசுவாசத்துக்கு தேவன் அளித்த பலனை அவன் காணத் தொடங்கினான். 48நம்மால் தேவனைக் காண முடியுமா என்று நாம் வியக்கிறோம். அவரை நாம் காண ஏதாகிலும் வழியுண்டா? தேவன் ஒரே ஒரு வழியை மாத்திரம் வகுத்திருந்தார், அதாவது யோபை சோதித்தல், அவன், என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன். இப்பொழுதோ, ''உம்மை நான் காண்கிறேன், என் கண் உம்மைக் காண்கிறது'' என்றான். காணக்கூடாதவரை அவன் தெளிவாகக் கண்டான். மேகங்கள் உருளுகிறதையும், மின்னல் அடிக்கிறதையும் அவன் கண்டான். இடிமுழக்கத்தை அவன் கேட்டான். ஒருக்கால் அது தெளிவான நாளாக இருந்திருக்கும். அவன் தேவனை அந்த மேகத்திலும், மின்னலிலும் கண்டான். அவனுடைய மாமிசக் கண்களினால் அவன் தேவனைக் காண முடிந்தது. பாருங்கள், ஏனெனில் காணக் கூடாதவர் காணக்கூடியவராக ஆனார். மற்றவர்கள் கண்ட தரிசனம் உறுதிப்படுத்தப்பட்டு, மாமிசக் கண்களுக்கு தெளிவாகக் காணப்பட்டது. 49கிரியையுள்ள விசுவாசத்தைப் போன்று. நாம் நேற்று இரவு பேசினது போல். ஆபிரகாம்.... அவனுக்கும் படிக்க வேதாகமம் இருக்கவில்லை. ஆனால் அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் தரிசனத்தைக் கண்டான், விசுவாசத்தைப் பெற்றிருந்தான். அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்று அவன் நினைப்பது தவறு என்று மற்றவர்களுக்குத் தோன்றினது. ஆனால் அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. ஏனெனில், அவன் குழந்தையைக் குறித்து கண்ட தரிசனத்தைப் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தான். ''எனக்கு குழந்தை கிடைக்கும்! எனக்கு குழந்தை கிடைக்கும்! என்று.'' அந்த குழந்தை பிறந்தபோது, அவன் தரிசனத்தில் கண்டதை மற்றவர் தங்கள் மாமிசக் கண்களினால் கண்டனர், உங்கள் இருதயத்தில் நீங்கள் விசுவாசிப்பதை செயல்படுத்தும் போது, நீங்கள் நடந்து கொள்ளும் விதத்திலிருந்து ஜனங்கள் தேவனை அறிந்து கொள்வார்கள். உங்களுக்கு என்ன நேரிடுகிறது என்பதையும் அறிவார்கள். அந்த விதமாகத்தான் நீங்கள் தேவனை கண்ணால் காணமுடியும். அவன் நன்மையானவை அனைத்தும் மற்றவர்களுக்கு செய்திருந்த போதிலும், அவனுக்காக வழக்காட ஒருவர் தேவைப்பட்டது. ஈசாக்கு பிறந்த போது, ஆபிரகாம் தரிசனத்தில் கண்டது உண்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டு, ஜனங்கள் அதை தங்கள் கண்களால் காண முடிந்தது. 50சில நேரங்களில் இந்த மகத்தான விசுவாசத்துடிப்பு ஆபத்தான நேரத்தில் (crisis) நமக்கு ஏற்படுகிறது. ஆபத்தான நிலைமை தான் நம்மை இதற்குள் விரட்டுகிறது. ஆபத்தான நிலைமையே யோபை அதற்குள் விரட்டினது. ஏன், அவன் தனது வாழ்க்கையின் முடிவையே அடைந்திருந்தான். அவனுடைய பிள்ளைகள் மரித்தனர், அவனுடைய ஒட்டகங்களும் கூட. அவனுடைய பொருட்கள் அனைத்துமே அழிந்து போயின. அவனுடைய உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் மட்டும், கொடிய பருக்கள் அவனை வாதித்தன. அது அவனுக்கு ஒரு ஆபத்தான நிலைமையாயிருந்தது. அந்த நேரத்தில் தான் ஆவியின் ஊக்கம் அவனுக்குக் கிடைத்தது. 51ஓ மனிதர்களே, ஸ்திரீகளே, இன்றிரவு நீங்கள் சுற்றிலும் பார்த்து கர்த்தருடைய வருகைக்கு நாம் எவ்வளவு அருகாமையில் உள்ளோம் என்பதைக் காண முடிந்தால்! பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமல் தள்ளிப் போட்டவர்களே, நீங்கள் உணர்ச்சியின் பேரிலோ, அல்லது சாத்தான் பாவனை செய்யும் ஒன்றை நீங்கள் செய்து அதன் பேரிலோ சார்ந்திருக்கக்கூடும். தேவனுடைய வாக்குத்தத்தங்களை முழுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையான ஆவி உங்களுக்குள் இராமல் இருக்கலாம். பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாக உரிமை பாராட்டும் ஒரு மனிதன், வேதாகமத்திலுள்ள ஒரு வார்த்தை 'சரியல்ல' என்று எப்படி அதை மறுதலிக்க முடியும்? நீங்கள் அப்படி செய்யவே முடியாது! நீங்கள் எவ்வளவு பக்தியுள்ளவர்களாயிருந்தாலும், நீங்கள் எத்தனை சபைகளைச் சேர்ந்திருந்தாலும், உங்கள் பெயர் எத்தனை புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தாலும் கவலையில்லை. அந்த உண்மையான பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருக்குமானால் (அது வார்த்தை வெளிப்படுதல்), நீங்கள் செய்தியையும் இந்த மணி நேரத்தையும் காண்பீர்கள். ஏனெனில் பரிசுத்த ஆவிதான் அதை செய்கிறது. ஆனால், அதை தீ கொளுத்த ஓன்று இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியின் ஊக்கம் அதை தாக்க வேண்டும். அங்கு... நீங்கள் தண்ணீரை தரையில், தரையில், தரையில் ஊற்றிக் கொண்டேயிருந்து, அது விழுவதற்கு விதை அங்கு இல்லாமல் போனால், அது எப்படி பலன் தர முடியும்? பலன் தருவதற்கு அங்கு ஒன்றுமில்லையே! அப்படியானால், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே அதை காண்பார்கள். 52தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அதை நோவாவின் காலத்தில், மோசேயின் காலத்தில், இயேசுவின் காலத்தில், அப்போஸ்தலர்களின் காலத்தில், லூத்தரின் காலத்தில், வெஸ்லியின் காலத்தில், பெந்தெகொஸ்தேயினரின் காலத்தில் கண்டனர். ஏனெனில் பரிசுத்த ஆவியின் ஊக்கம் ஊற்றப்பட்ட போது, அது தரையில் இருந்த விதையாக இருந்தது. மணவாட்டியை ஒன்று சேர்ப்பதற்காக ஊக்கம் ஊற்றப்படும் போது, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே அதை காண்பார்கள். இயேசு, ''பிதாவே! இவைகளை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்'' என்றார்; (மத்;11:25, லூக். 10:21) ஊக்கம் அதை தாக்க வேண்டும். 53ஊக்கம் அவனைத் தாக்கின போது, அது நடந்தது. அவன் அதை பெற்றுக் கொண்டான். ஆபத்தான நேரம் ஒன்று வருகிறதென்றும், அப்பொழுது நெருக்கம் உண்டாகிறதென்றும் நாம் காண்கிறோம். இன்று சுற்றிலும் பார்த்து. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையைக் காணுங்கள், நாம் நவீன சோதோம் கொமோராவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லவா? உலகம் மீண்டும் அந்நிலைக்கு வந்துள்ளது அல்லவா? அது அக்கினியினால் அன்று அழிக்கப்பட்ட புறஜாதி உலகமாயிருந்தது. லூக்கா 17ம் அதிகாரம், 28, 29, 30ம் வசனங்களில் இயேசு, ''சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷ குமாரன் வருங்காலத்திலும், மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் நடக்கும்'' என்று கூறவில்லையா? ''வெளிப்படுதல்'' என்றால் என்ன? ஒரு இரகசியம் வெளிப்படையாதல், வெளிப்பாடு, ஒரு இரகசியத்தை அறிவித்தல் அல்லது வெளிப்படுத்துதல். சபை காலங்கள் தோறும் மறைந்திருந்த இந்த காரியங்கள் இப்பொழுது வெளிப்படுகின்றன, அறிவிக்கப்படுகின்றன. நாம் ஒன்றைக் கூறி, அதை தேவன் உறுதிப்படுத்தாமல் போனால், அது தவறு. பாருங்கள், தமது வார்த்தையை வியாக்கியானப்படுத்த தேவனுக்கு யாரும் அவசியமேயில்லை, அவரே அவருடைய சொந்த வியாக்கியானி. அவர், ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்று கூறினார். அவள் கர்ப்பவதியானாள். அவர்,''வெளிச்சம் உண்டாகக் கடவது'' என்றார். வெளிச்சம் உண்டானது. நாம் லூத்தரின் காலத்திலோ, வெஸ்லியின் காலத்திலோ அல்லது பெந்தெகொஸ்தேயினரின் காலத்திலோ வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. பெந்தெகொஸ்தேயினரின் காலத்தில் வரங்கள் மாத்திரம் சபைக்கு திரும்ப அளிக்கப்பட்டன. ஆனால் நாமோ சாயங்கால நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், மணவாட்டி வெளியே அழைக்கப்படும் நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 54கத்தோலிக்கர்களுக்கு எவ்வாறு லூத்தரைக் கண்டு கொள்ள முடியவில்லையோ, லூத்தரன்களுக்கு எவ்வாறு வெஸ்லியைக் கண்டு கொள்ள முடியவில்லையா, வெஸ்லியர்களுக்கு எவ்வாறு பெந்தெகொஸ்தே காலத்தை அறிந்து கொள்ள முடியவில்லையோ, அவ்வாறே பெந்தெகொஸ்தேயினருக்கு இந்த காலத்தை அறிந்து கொள்வதென்பது கடினமாயிருக்கும். அது எக்காலத்தும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. ஏனெனில், அது தெரிந்து கொள்ளப்பட்ட வித்துக்களின் மேல் மாத்திரமே ஊற்றப்படுகின்றது. அப்படித்தான் வேதம் போதிக்கின்றது. ''மற்றவர்களால் அதை காண இயலாது. இயேவும் கூட அவர்களுக்காக ஜெபம் செய்து, அவர்கள் குருடராயிருப்பதை அறியாமலிருக்கிறார்கள்'' என்றார். வெளிப்படுத்தின விசேஷம் லவோதிக்கேயா சபையின் காலத்தைக் குறித்து அவ்வாறு நமக்கு உரைக்கிறது. ''அவர்கள் நிர்வாணிகள்! தரித்திரர்! பரிதபிக்கப்படத்தக்கவர்கள்! குருடர்! அப்படியிருந்தும் அதை அறியாமலிருக்கிறார்கள்'' (வெளி;3:17). அது வந்துவிட்டது. அவர்களால் காணமுடியவில்லை. அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் தங்கள் பாரம்பரியங்களில் மூழ்கியிருக்கிறார்கள். 55ஆனால், இயேசு கிறிஸ்துவின் வாயினால் வாக்களிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையை நினைவு கூருங்கள். வார்த்தையை உரைத்து சிருஷ்டிப்பை உண்டாக்கன தேவன் அவரே. உலகத் தோற்றத்துக்கு முன்னால் ''உண்டாகக்கடவது'' என்னும் வார்த்தைகளை உரைத்தவர் அவரே. அவை உண்டாயின. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை, ஆனால் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு ''அதிகாரங் கொடுத்தார்'' என்று அவர் கூறினார்; (யோவான்;1:10,12). சிருஷ்டி கர்த்தர் தாமே லாசருவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பின் போது, இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்; ஏனென்றால், ''பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் மனுஷகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும். அவர்கள் கேட்டு எழுந்திருந்து புறப்படுவார்கள்'' என்றார்; (யோவான்;5:28,29). ''வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்றுரைத்த அதே தேவன், ''மனுஷ குமாரனுடைய சத்தம் பிரேதக் குழிகளிலுள்ள அனைவரையும் எழுப்பும்'' என்றார். அவை நிகழ்வதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, அவர் ''ஆணும் பெண்ணுமாக உண்டாகக்கடவது'' என்றார். 56ஆவியின் ஊக்கம் ஏசாயாவுக்கு உண்டானது. அவன், ''நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தர், சமா தானப்பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா எனப்படும்'' என்றான்; (ஏசா;9:6). ஆண்டுகள் கடந்தன, மாதங்கள் கடந்தன, நாட்கள் கடந்தன, வாரங்கள் கடந்தன, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கடந்தன. எண்ணூறு ஆண்டுகள் கழித்து இம்மானுவேல் ஒரு கன்னிகையின் மூலம் பிறந்தார் ஏன்? அது அபிஷேகம் பண்ணப்பட்ட தேவனுடைய தீர்க்கதரிசியின் உதடுகளினால் உரைக்கப்பட்டது. அப்பொழுது ஒரு வித்து புறப்பட்டு சென்றது. பாருங்கள்? அந்த மகத்தான நேரம்.... ''நீ ஒரு தரிசனத்தை அல்லது ஒரு அடையாளத்தை என்னிடம் வேண்டிக்கொள்'' என்றார்; (ஏசா;7:11). அவர், ''நான் அவர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பேன். ஒரு நித்திய அடையாளம். ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள், அது நித்திய அடையாளமாயிருக்கும்'' என்றார். உண்மையான நெருக்கத்தின் நேரத்தில், தேவனுடைய ஆவி உள்ளே வருகிறதை நாம் காண்கிறோம். அவர் தமது கரத்தை அசைப்பதற்கு முன்பு, எபிரேய பிள்ளைகள் பற்றி எரிகிற அக்கினிச் சூளைக்குள் நடக்க அனுமதித்தார். ஆனால் அவர் அசையும் போது, உண்மையாகவே அசைகிறார். 57இப்பொழுது, இங்கு நாம் காண்கிறோம், லூக்கா 17ம் அதிகாரம் 30ம் வசனத்தில், ''சோதோம் கொமோராவின் அழிவுக்கு முன்பாக அவர் செய்தது போலவே, கடைசி நாட்களிலும் மனுஷகுமாரன் தம்மை வெளிப்படுத்துவார், அதே நிலை இப்பொழுதும் இருக்கும்'' என்று அவர் கூறியுள்ளார். அவர் மோசேயைக் குறித்துக் கூறினார், ...என்னை மன்னிக்கவும். மோசேயைக் குறித்தல்ல, நோவாவைக் குறித்து - ''ஜனங்கள் எவ்வாறு புசித்தார்கள், குடித்தார்கள். பெண் கொண்டார்கள், பெண் கொடுத்தார்கள்'' என்று. அவர் தொடர்ந்து, ''லோத்தின் நாட்களில் நடந்தது போலவே, மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் நடக்கும்'' என்றார். கவனியுங்கள், மனுஷகுமாரன் ஆபிரகாமின் குழுவுக்கு ஒரு மனிதனாக, மாமிச ரூபத்தில் தீர்க்கதரிசியாக, துணிகளில் அழுக்கு படிந்த ஒரு சாதாரண மனிதனாக வெளிப்பட்டார். ஆபிரகாம் அவரை, ''ஏலோகிம்'' என்றழைத்தான். 58கடைசி நாட்களில் மறுபடியுமாக மனுஷகுமாரன் அதேவிதமான குழுவுக்கு, ஆபிரகாமின் ராஜரீக சந்ததிக்கு, அக்கினி விழுவதற்கு முன்பு, வெளிப்படுவார் என்று இயேசு இங்கு வாக்களித்துள்ளார். அதற்கு பின்பு சபையானது சாட்சிகள் எவரையுமே பெறவில்லை. ஆபிரகாமும் அவனைச் சேர்ந்தவர்களும் பெறவில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அதன் பின்பு அவர்கள் எதிர்பார்த்திருந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் நேரடியாக கொண்டு வரப்பட்டான். சபையும் அவ்வாறே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர் நோக்கியுள்ளது. இந்த ஊழியத்தின் நாட்களுக்கு பிறகு அவர் வருவார். அவர் வானங்களில் வெளிப்படுவார், இதை நாம் மிகவும் தெளிவாகக் காண்கிறோம். அது அப்படித்தான் இருக்க வேண்டும். நடக்க வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவெனில், ஒரு துடிப்பு ஏற்பட்டு ஒரு மனிதனுக்குள் நுழைந்து விடுகிறது. தேவன் உறுதிப்படுத்தி, இது தான் நிகழ வேண்டும் என்பதை அவனுக்குக் காண்பிக்கிறார். அவன் தான் அதை.., 59மோசே செய்தது போல்... இஸ்ரவேல் புத்திரரை மீட்க அவனுக்கு விருப்பமில்லை, ஆனால் தேவன் எரிகிற முட்செடியிலிருந்து அவனுடன் பேசினார். அவனுக்குப் போகப் பிரியமில்லை, ஆனால் அவன் போக வேண்டியதாயிற்று. அவர் மகத்தான யேகோவா என்று மோசே அவரைக் குறித்து கேள்விப்பட்டிருந்தான். ஆனால், அவனால் அவரைக் காண முடிந்தது. அவர் அக்கினி ஸ்தம்ப வடிவில் இருந்தார். ''நான் உம்மைக் குறித்து கேள்விப்பட்டேன், இப்பொழுதோ உம்மைக் காண்கிறேன்.'' அவன் அதில் என்ன கண்டான்? அவருடைய வார்த்தை உறுதிப்படுவதை. தேவன் ஆபிரகாமிடம் அவனுடைய ஜனங்கள் அந்நிய தேசத்தில் நானூறு ஆண்டுகள் சஞ்சரிப்பார்களென்றும், அதன் பிறகு அவர்களைப் பலத்த கரத்தினால் வெளியே கொண்டு வருவாரென்றும் வாக்களித்திருந்தார். கவனியுங்கள், இந்த எரிகிற முட்செடி, என்ன நடக்குமென்று தீர்க்கதரிசியாகிய ஆபிரகாம் கூறினானோ. அதை உறுதிப்படுத்தினது. மோசே, ''நான் அதைக் குறித்து கேள்விப்பட்டேன், இப்பொழுதோ அதை காண்கிறேன்'' என்றான். 60சோதோமின் அழிவுக்கு சற்று முன்பு அவர் தம்மை வெளிப்படுத்தின விதமாகவே, கடைசி நாட்களிலும் மனுஷகுமாரன் தமது ஜனங்களின் மத்தியில் வந்து தம்மை வெளிப்படுத்துவார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். மனுஷகுமாரன் என்ன செய்தார்? அவர் சாராளின் இருதயத்திலிருந்த இரகசியங்களை அறிந்தார். மேலும் அவர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார். ஆபிரகாம் தேவனுடைய சத்தத்தை முன்பு கேட்டிருந்தான். அவரை அவன் வெவ்வேறு வழிகளில் கண்டிருப்பான் (அவன் எப்படி அவருடன் பேசினான் என்று எனக்குத் தெரியாது. சொப்பனங்களின் மூலமாகவோ அல்லது தீர்க்கதரிசனங்களின் மூலமாகவோ). ஆனால் இந்த முறை அவன் அவரைக் கண்டான். ''நான் உம்மைக் குறித்து கேள்விப்பட்டேன், இப்பொழுதோ உம்மைக் காண்கிறேன்.'' சபை தேவனைக் குறித்து கேள்விப்பட்டிருந்தது; அவர் என்ன செய்திருக்கிறார் என்றும், அவர் செய்துள்ள வாக்குத்தத்தத்தைக் குறித்தும் அது படித்திருக்கிறது. ஆனால், இப்பொழுதோ நாம் நமது கண்களால் அவரைக் காண்கிறோம்; (யோபு செய்தது போல்). ''நான் உம்மைக் குறித்து கேள்விப்பட்டேன், இப்பொழுதோ உம்மைக் காண்கிறேன்,'' என்ன ஒரு வித்தியாசம்! 61மோசே, அந்த ஆபத்தான நிலையில் முறையிட்டான். யாத்திராகமம் 14ம் அதிகாரம், 13 முதல் 16 வசனங்களில் நாம் காண்பது என்னவெனில், இஸ்ரவேல் ஜனங்களுடன் கூட நெருக்கடியான நிலையில் இருந்த மோசேக்கு ஊக்கம் மேலிட்டது. அவன் சொல்ல வேண்டியதை, அவன் என்ன கூறுகிறான் என்பதை அறியாமலே, அவன் கூறினான். பாருங்கள்? ''நீங்கள் நின்று கொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்''. தேவன் அவனுடன் அப்பொழுது பேசவில்லை. பாருங்கள், அவனுக்கு ஊக்கம் மேலிட்டது. இஸ்ரவேல் புத்திரர், ''எங்களை ஏன் இங்கு கொண்டு வந்தீர்? நாங்கள் எகிப்திலேயே மரித்திருக்கலாம். எகிப்திலே பிரேதக் குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டு வந்தீர்? நாங்கள் சாகும் வரைக்கும் சமாதானத்துடன் அங்கு தங்கியிருக்கலாம். ஆனால், நீரோ எங்களை இங்கு கொண்டு வந்தீர்'' என்றனர். தீர்க்கதரிசியாகிய மோசே, தேவனிடம் அவனுக்கு தொடர்பு உண்டு என்பதை அறிந்திருந்தான். அவன் ஆவியின் இலக்கம் பெற்று, ''நீங்கள் நின்று கொண்டு கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்'' என்றான். அப்படி நடக்கப் போகிறது என்று அவன் எப்படி அறிந்தான்? அவனுக்கு எப்படி தெரியும்? அவன் என்ன பேசினான் என்று அவனுக்கே தெரியவில்லை. 62ஆனால், அவனுடைய மத்தியஸ்த ஊழியத்தில், அவன் அதை உரைத்தான். அதை எப்படி செய்ய வேண்டுமென்று தேவன் மோசேக்குக் கற்பித்தார். அவர், ''மோசே என்னிடம் முறையிடாதே. உன் கோலை உன் கையில் கொண்டு போய் அதை சமுத்திரத்தின் மேல் நீட்டி, இஸ்ரவேல் புத்திரரிடம் நடந்து போகும்படி சொல்'' என்றார். ஆமென்! ஆவியின் ஊக்கம்! நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், அப்படித்தான் அந்த ஊக்கம் உங்களுக்குள் வருகிறது. நீங்கள் அவதியுற்றிருந்தால், அப்படித்தான் அந்த ஊக்கம் உங்களுக்குள் வருகிறது. அது உங்களுக்கு வெளிப்படுகிறது. அது உங்களுக்கு வெளிப்படுவதை நீங்கள் அறியும் போது, நீங்கள் நான் சுகமடைந்து விட்டேன்'' என்று கூறுகிறீர்கள். அப்பொழுது தேவன் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று உங்களிடம் கூறுகிறார்: ''எழுந்து நட'' ஆமென்! நீங்கள் அப்படி செய்யும் போது, எல்லாம் முடிந்து விடுகிறது. அப்படித்தான் தேவன் செய்கிறார். அப்பொழுது நீங்கள் தேவன் உங்கள் மூலம் வெளிப்படுவதைக் காண்பீர்கள். அப்படி செய்யும்படி தேவன் தான் மோசேயிடம் கூறினார். அங்கு கூடியிருந்த இஸ்ரவேலர் அனைவருமே மோசேக்கு ஆவியின் ஊக்கம் மேலிடுவதைக் கண்டனர். தேவன் தண்ணீரை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் பிரித்ததை அவர்கள் தங்கள் சொந்த கண்களினால் கண்டனர். அந்த அக்கினி ஸ்தம்பம் அவர்களை சமுத்திரத்தின் வழியாக வழி நடத்தினது. அவன் தேவனைக் குறித்து கேள்விப்பட்டான், பிறகு அவர்கள் தேவனைக் கண்டனர். 63சேனைகள் அவனுக்கு விரோதமாக ஒன்று கூடின போது, யோசுவா ஆபத்தான நேரத்தில் இருந்தான். சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. யோசுவா ஒரு தீர்க்கதரிசி. சேனைகள் மறுபடியுமாக ஒன்றாக இணைந்து அவனுக்கு விரோதமாகப் புறப்பட தருணம் கிடைத்தால், அவன் அநேக மனிதரை இழக்க நேரிடும் என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே அந்த ஆபத்தான நேரத்தில், ஏதாவதொன்று செய்தாக வேண்டும்.... ஒன்றே ஒன்று மாத்திரமேயுண்டு. அதாவது அவன் சேனைகளை ஓட வைத்தால், அவர்கள் அனைவரையும் அவன் மடங்கடிக்க முடியும். ஆனால் அப்படி செய்ய போதிய வெளிச்சம் இருக்கவில்லை. எனவே யோசுவா அங்கு நின்று கொண்டு, தன் கரங்களையுயர்த்தி, ''நான் யுத்தத்தை முடிக்கும் வரைக்கும், சூரியனே, தரித்து நில்! சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல் தரித்து நில்!'' என்றான்; (யோசுவா;10:12). அப்படியே சூரியன் தரித்தது. அவர்கள் யோசுவா பேசுவதைக் கேட்டனர், அதன் பின்பு தேவன் கிரியை செய்வதை தங்கள் சொந்த கண்களினால் கண்டனர். உண்மை! 64பாருங்கள், நடக்கக் கூடாத ஒரு காரியம் நடப்பதைக் காண்பது முரணான ஒன்று போல் காணப்படுகின்றது. அது “ முரணாகக் காணப்பட்டாலும், அது உண்மை . சூரியன் தரித்தது '' என்று வேதம் கூறுகின்றது (யோசுவா 10:13). உலகம் உருண்டையாயுள்ளது என்று கருதும் மக்களாகிய நீங்கள் இதைக் குறித்து என்ன நினைக்கிறீர்களோ, எனக்குத் தெரியாது . ஆனால், என்னவாயினும் சூரியன் தரித்தது''. யோசுவா, அதை எப்படி செய்யப் போகின்றான் என்று தேவன் அதை எப்படி செய்யப் போகிறாரென்று யோசிக்க வேண்டிய அவசியமே' இருக்கவில்லை, அவன் செய்த ஒன்றே ஒன்று சூரியனே, தரித்து நில்' என்று கூறுவதே. ஒருக்கால் அவன் கூறினது என்னவென்று அறியாமலே அதை அவன் கூறியிருக்க வகையுண்டு. ஏனெனில் தேவன் தான் அவன் அதை கூறும்படி செய்தார். அது கிரியை செய்தது. அதுவே தான் மாற்கு 11:23: எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னப்படியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும். ஆனால் உங்கள் மனதில் சந்தேகம் கொண்டவர்களாய் நீங்கள் அங்கு நின்று கொண்டு அதை சொல்லக் கூடாது. அதை சொல்ல நீங்கள் ஆவியானவரால் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆமென்! 65இதை கூறுவதால் மன்னிக்கவும். அன்றொரு நாள் அந்த காடுகளில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, (தேவன் என் நியாயாதிபதி. நான் தவறுரைத்தால் இந்த பிரசங்க பீடத்திலேயே விழுந்து மரிக்கக்கூடும்), அந்த வேதவாக்கியம் என வாழ்நாள் முழுவதும் புதிராக இருந்த போது.... அன்று காலை அந்த காடுகளில் நான் உட்கார்ந்து கொண்டு அதைக் குறித்து சிந்தனை செய்து கொண்டிருந்த போது, அந்த சத்தம் என்னுடன் பேசினது. அவர், ''அந்த வேதவாக்கியம், மற்றெல்லா வேதவாக்கியங்களைப் போல் உண்மையானது'' என்றார். நான், ''அது எப்படி இருக்க முடியும்?'' என்று நினைத்தேன். அவர், ''நீ...'' என்றார். நான் சொன்னேன்... அவர், ''பேசு, அது அப்படியே நிறைவேறும். சந்தேகப்படாதே'' என்றார். நான் காடுகளில் உட்கார்ந்து கொண்டு அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மூன்று நாட்களாக அணில்கள் ஒன்றும் அங்கில்லை, ஒரு அணிலும் இல்லை. நான் காட்டத்தி மரம் அடர்த்தியாக வளர்ந்துள்ள இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன், அணில்கள் அங்கு வருவதேயில்லை.... அணில் வேட்டையாடும் எவரும், அவை காட்டத்தி மரத்தில் இருப்பதில்லை என்பதை அறிவர். நான் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன், காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது, அது காலை சுமார் பத்து மணியாக இருந்தது. நான் மறுபடியும் யோசித்தேன். அப்பொழுது அந்த சத்தம், நீ வேட்டையாடிக் கொண்டிருக்கிறாய், ''ஆபிரகாமுக்கு ஆட்டுக்கடா தேவைப்பட்டது போல, உனக்கு அணில்கள் தேவைப்படுகின்றன'' என்றது. ''அந்த சத்தம் எப்பொழுதுமே என்னிடம் உண்மையைக் கூறி வந்துள்ளது, ஆனால் இது விசித்திரமாயுள்ளதே'' என்று எண்ணி, ''நான் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்து எழுந்து, என்னுடன் பேசிக் கொண்டிருந்த நபர் எங்கே?'' என்று சுற்று முற்றும் நோக்கினேன், அங்கு ஒன்றுமே காணப்படவில்லை. காற்று மாத்திரம் பலமாக அடித்துக் கொண்டிருந்தது. ''நான் ஒருக்கால் உறங்கிப் போய், சொப்பனம் கண்டேனா?'' என்று எண்ணினேன். இல்லை, நான் உறங்கவில்லை. நான் மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு கவனித்துக் கொண்டிருந்தேன். நான் காலை பத்து மணியளவில் சகோ. உட், சகோ. சாத்மன் அவர்களை அங்கு சந்திக்க வேண்டியவனாயிருந்தேன். அங்கு விவசாயிகள் வேலை செய்து கொண்டு, சோளத்தை சேகரித்துக் கொண்டிருந்தனர். 66அந்த சத்தம் மறுபடியும், ''நீ வேட்டையாடிக் கொண்டிருக்கிறாய், உனக்கு வேட்டை பொருள் அவசியம். உனக்கு எத்தனை வேண்டும்?'' என்றது. நான் அதிகமாகக் கேட்கக் கூடாதென்று நினைத்து, ''நான் மூன்று அணில்கள் கேட்கப் போகிறேன் என்று மனதில் எண்ணி, எனக்கு மூன்று சிவப்பு நிற இளம் அணில்கள் வேண்டும்'' என்றேன். அவர், ''அப்படியானால், அதைக் குறித்து பேசு'' என்றார். நான், ''மூன்று சிகப்பு நிற இனம் அணில்களைப் பெறப் போகின்றேன்'' என்றேன். அவர், ''எந்த வழியாக அவை வர வேண்டும்? என்று கேட்டார்.'' ''நல்லது, நான் இத்தனை தூரம் சென்று விட்டேன்.'' ஏதோ ஒன்று என்னிடம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறது'' என்று எண்ணினேன் - நான் பேசுவதை நீங்கள் கேட்பது போல். பரலோகத்தின் தேவன், இந்த வேதாகமம் என் இருதயத்தின் மேல் இருக்கும் இந்நேரத்தில், அது உண்மையென்று அறிவார். அவர்... நான், நல்லது... என்று நினைத்து, ஒரு கேலித்தனமான இடத்தை தேர்ந்தெடுத்தேன். அது தொங்கிக் கொண்டிருந்த ஒரு உலர்ந்து போன கிளை (என் துப்பாக்கி உள்ள இடத்திலிருந்து சுமார் ஐம்பது கெஜ தூரம்). நான், ''முதலாம் அணில் அங்கிருக்க வேண்டும்'' என்றேன். அது அங்கிருந்தது. என் கண்களை நான் துடைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தேன். (என் தலையைத் திருப்பினேன்). ''ஒரு தரிசனத்தை நான் சுட விரும்பவில்லை'' என்று நினைத்தேன். நான் மறுபடியும் திரும்பிப் பார்த்தேன். அந்த அணில் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தது. நான் ஒரு தோட்டாவை துப்பாக்கிக்குள் போட்டு குறி வைத்தேன். அந்த சிகப்பு நிற இளம் அணிலின் கறுப்பு கண்ணை என்னால் காண முடிந்தது. ''நான் ஒருக்கால் உறங்கிக் கொண்டிருக்கிறேனா, இன்னும் சில நிமிடங்களில் நான் எழுந்து விடுவேன். நான் இதைக் குறித்து சொப்பனம் கண்டு கொண்டிருக்கிறேன்'' என்று நினைத்தேன். நான் துப்பாக்கியை சரிமட்டமாக வைத்து, அணிலைச் சுட்டேன். அது கிளையிலிருந்து கீழே விழுந்தது. எனக்குத் தெரியவில்லையே. ''அதை சென்று பார்க்க வேண்டுமா?'' என்று நினைத்தேன். நான் அங்கு நடந்து சென்றேன். அந்த அணில் அங்கு கிடந்தது. அதை நான் கையிலெடுத்தேன். இரத்தம் அதிலிருந்து வடிந்து கொண்டிருந்தது. ஒரு தரிசனத்துக்கு இரத்தம் வடியாது என்று உங்களுக்குத் தெரியும். அதை நான் கையிலெடுத்தேன். அது ஒரு அணில். என் உடல் முழுவதும் மரத்தப் போனது. 67நான் சுற்று முற்றும் பார்த்தேன். ''தேவனே, அது நீர்தானா?'' என்றேன். நான், ''இதற்காக உமக்கு நன்றி. நான் சென்று...'' என்றேன். அவர், ''நீ சொன்னாய்! நீ சொன்னதை சந்தேகப்படுகிறாயா? உனக்கு மூன்று வேண்டும் என்று கூறினாய். அடுத்தது எங்கிருந்து வர வேண்டும்?'' என்று கேட்டார். ''நான் சொப்பனம் கண்டு கொண்டிருந்தால் தொடர்ந்து சொப்பனம் காண்பேன்'' என்று எண்ணினேன். நான் சொன்னேன். ''நான் மரத்தின் அருகிலுள்ள ஒரு பழைய கம்பத்தை தேர்ந்தெடுத்தேன். அதன் மேல் விஷமுள்ள பசுங்கொடி ஒன்று படர்ந்திருந்தது. அதில் ஒரு அணிலையும் நீங்கள் ஒருக்காலும் காண முடியாது. நான் அடுத்த அணில் விஷமுள்ள அந்த கொடியிலிருந்து வர வேண்டும்'' என்றேன். அப்பொழுது ஒரு சிகப்பு நிற இளம் அணில் அங்கு உட்கார்ந்து கொண்டு, என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. நான் துப்பாக்கியை கீழே வைத்து விட்டு என் கண்களைப் பிசைந்தேன். நான் மறுபடியும் திரும்பிப் பார்த்தேன். நான் நினைத்தேன்.... அது தலையை பக்கவாட்டில் சாய்த்த வண்ணம் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தது. அந்த அணிலை சுட்டு வீழ்த்தி விட்டு, வீடு செல்லப் புறப்பட்டேன். அப்பொழுது அவர், ''நீ மூன்று கேட்டாயே, நீ சொன்னதை சந்தேகிக்கிறாயா?“ என்றார். நான், ''இல்லை, ஆண்டவரே, நான் சொன்னதை சந்தேகிக்கவில்லை, ஏனெனில் நீர் அதை உறுதிப்படுத்துகிறீர்'' என்றேன். இந்த ஒரு வேதவாக்கியம் எனக்குப் புதிராயிருந்தது: ''நான் சொனனால்'' என்றல்ல ''நீ சொன்னால்'' இயேசு சொனனால் என்றல்ல, நீயே அதை சொன்னால். 68''எப்படியோ அந்த வாய்க்காலுக்குள் நான் நுழைந்து விட்டேன். அவர் இங்கிருக்கிறார் என்றறிவேன். எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது போல் இருக்கிறது. இதை இன்னும் அதிக கேலித்தன மாக்குகிறேன்'' என்றேன். நான், ''ஒரு சிகப்பு அணில், அந்த மலையிலிருந்து கீழே இறங்கி இந்த வழியாக வந்து, என் அருகில் வந்து, இங்கிருந்து புறப்பட்டு சென்று அந்த கிளையின் மேல் உட்கார்ந்து அந்த விவசாயியை நோக்க வேண்டும்'' என்றேன். நான் உரைத்தபடியே, அது மலையிலிருந்து கீழே இறங்கி வந்து, இங்கிருந்து புறப்பட்டு அங்கு சென்று உட்கார்ந்து, அந்த விவசாயியை நோக்கினது. அதை நான் சுட்டேன். சாத்தான் என்னிடம். உனக்குத் தெரியுமா, ''காடு இப்பொழுது அணில்களால் நிறைந்துள்ளது'' என்றான். நான் பன்னிரண்டு மணி வரைக்கும் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன். வேறு ஒரு அணிலையும் நான் காணவில்லை. அது எதைக் காண்பிக்கிறதென்றால், ''தேவன்... அவரே வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்த கர்த்தர்.'' 69இப்பொழுது ஜெபர்ஸன்வில்லில் கேட்டுக் கொண்டிருப்பது, ரைட் என்னும் பெயர் கொண்ட ஒரு குடும்பம். சகோ. உட்டும் நானும் அவர்களைக் காணச் சென்றிருந்தோம். அவர்கள் சபை இராப்போஜனத்துக்கு திராட்சை ரசம் தயாரிப்பவர்கள். சிறிய ஈடித் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் ஊனமுள்ள ஒரு சிறு பெண், தன் வாழ்நாள் முழுவதும் வியாதியாயிருந்தாள். அவளைச் சுகப்படுத்த வேண்டுமென்று நாங்கள் எப்பொழுதுமே தேவனிடம் முறையிட்டதுண்டு. அவளுடைய சகோதரி ஒரு விதவை. அவளுடைய கணவர் கொல்லப்பட்டார். அவளுடைய பெயர் ஹாட்டி, மிகவும் தாழ்மையுள்ள ஸ்திரீ. நானும் சகோ. பாக்ஸும் அவளுக்காக ஒரு முயலை வாங்கச் சென்றிருந்த போது, அவர்கள் உணவு சமைத்து நாங்கள் சாப்பிட வேண்டுமென்று கேட்டு கொண்டனர். நாங்கள் எல்லோரும் மேசையைச் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு, சில நாட்களுக்கு முன்பு நடந்து இந்த சம்பவத்தைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். நான் மேசையினருகே உட்கார்ந்து இதைக் குறித்து பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று நான், என்ன நடந்திருக்க முடியும்? சகோ. ரைட், நீங்கள் வயோதிபர். உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் அணில் வேட்டையாடியிருக்கிறீர்கள். சகோ. ஷெல்பி, அணில் வேட்டையாடுவதில் நீர் நிபுணர். சகோ. உட், நீங்களும் அப்படித்தான். நானும் என் சிறு வயது முதற்கொண்டே அணில் வேட்டையாடி வந்திருக்கிறேன், ''நீங்கள் எப்பொழுதாவது அணில் காட்டத்தி மரப்புதரிலும், வேல மரப்புதரிலும் கண்டதுண்டா?'' என்று கேட்டேன். ''இல்லை, ஐயா'' என்றனர். நான், அவை அங்கிருக்கவில்லை. எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று, ''அது அதே தேவன். ஆபிரகாமுக்கு ஆட்டுக்கடா தேவைப்பட்ட போது, அவர் யேகோவாயீரேவாக இருந்தார். அவர் தமக்கென்று ஒன்றை அளிக்க முடிந்தது. அதே காரியம் நிகழ்ந்தது என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்றேன். 70அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அந்த சிறு ஹாட்டி, ''சகோ. பிரான்ஹாமே, அது உண்மையேயன்றி வேறொன்றுமில்லை'' என்றாள். அவள் சரியானபடி கூறினாள். அவள் அதைக் கூறின போது, பரிசுத்த ஆவியானவர் அந்த வாய்க்காலுக்குள் மறுபடியும் வந்தார், அங்கிருந்த ஒவ்வொருவரும். அதை உணர்ந்தனர். நான் எழுந்து நின்று, ''சகோதரி ஹாட்டி, கர்த்தர் உரைக்கிறதாவது, நீ அந்த சீரோபோனிக்கியா தேசத்து ஸ்திரீயைப் போல் சரியான வார்த்தையைக் கூறினாய். பரிசுத்த ஆவியானவர் என்னிடம் இப்பொழுது பேசி, உன் இருதயத்தின் வாஞ்சையை உனக்கு அருளும்படி கூறுகிறார். நான் தேவனுடைய ஊழியக்காரனாயிருந்தால், அது நிறைவேறும். நான் தேவனுடைய ஊழியக்காரனாக இல்லாமற் போனால், நான் ஒரு பொய்காரன், அது நிறைவேறாது, நான் வஞ்சகன். இது தேவனுடைய ஆவியா இல்லையா என்று சோதித்துப் பார்'' என்றேன். அவள், ''சகோ. பிரான்ஹாம்'' என்றாள் (எல்லோரும் அழுதனர்) அவள், ''நான் என்ன கேட்பது?'' என்றாள். நான், ''ஊனமுள்ள உன் சகோதரி இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்'' என்றேன். 71அவள் நன்கொடையாக அளித்த இருபது டாலர்களை அவளிடம் திருப்பிக் கொடுப்பதற்காக என் ஜேபியில் வைத்திருந்தேன். அந்த ஸ்திரீ அவளுடைய எளிய சிறு பண்ணையிலிருந்து ஆண்டொன்றுக்கு இருநூறு டாலர்கள் வருமானம் கூட பெறுவதில்லை. அவளுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். அவர்கள் பள்ளிக் கூட நாட்களில் 'ரிக்கி' களாக இருந்து, அவர்களுடைய தாயை துன்புறுத்தி வந்தனர். பதினைந்து, பதினாறு வயதுடையவர்கள். அவர்கள் அங்கு நின்று கொண்டு நான் கூறுவதைக் கேட்டு கேலியாக சிரித்தனர். நான், ''உனக்கு வயோதிப் பெற்றோர் உள்ளனர். உன்னிடம் பணம் இல்லை. நீ பணத்தைக் கேட்டு, அது உன் மடியில் வருகிறதா என்று பார். உன் சகோதரியின் சுகத்தைக் கேள். அவள் எழுந்து நடக்கிறாளா இல்லையாவென்று பார்'' என்றேன். ஆவியின் ஊக்கம் வரும்போது, அதை அறிந்து கொள்ள முடியுமென்று யோபைப் போல் நானும் அறிந்திருந்தேன். நான், ''இதோ இங்கு பத்து பேர்களுக்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கிறேன். இது நிறைவேறவில்லையென்றால், நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி'' என்றேன். அவள், ''நான் என்ன கேட்பது?'' என்றாள். நான், ''நீ செய்யப் போகும் தீர்மானம் உன்னைப் பொறுத்தது. உனக்காக நான் தீர்மானம் செய்ய முடியாது'' என்றேன். அந்த ஸ்திரீ சுற்றுமுற்றும் பார்த்தாள். திடீரென்று அவள், ''சகோ. பிரான்ஹாமே, என் இருதயத்திலுள்ள மிகப் பெரிய வாஞ்சை, என் இரு பையன்களின் இரட்சிப்பே'' என்றாள். ''இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, உன் பையன்களை உனக்குத் தருகிறேன்'' என்றேன். அங்கு சிரித்து கேலி செய்து கொண்டிருந்த அந்த பையன்கள், அவர்களுடைய தாயின் மடியில் விழுந்து, தங்கள் வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணித்து, அந்த நேரத்திலேயே பரிசுத்த ஆவியினால் நிறைக்கப்பட்டனர். அந்த நேரத்திலேயே! ஏன்? இது உண்மை. இது தவறாயிருக்குமானால் இந்த தேசத்திலுள்ள ஜனங்களுக்கு முன்பாக என்னைக்கொன்று போட தேவனுக்கு அதிகாரமுண்டு. இங்குள்ள உங்களில் அநேகரும், ஜெபர்ஸன்வில்லில் உள்ளவர்களும்; ஜெபர்ஸன்வில் கூடாரம், ''ஆமென்'' என்று இப்பொழுது ரீங்காரம் செய்வதை என்னால் கேட்க முடிகிறது. ஏனெனில், அவர்கள் அங்கு உட் கார்ந்து கொண்டு இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இது உண்மை! அது என்ன? தேவன் தமது இராஜாதிபத்திய கிருபையினால் அருளும் போது, அது நிறைவேறுகிறது. அதற்கு புறம்பே அது நிறைவேறுவதில்லை. 72அந்த கடினமான நேரத்தில்... எனக்கு அறிமுகமான மனிதரையும், ஜனங்களையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். தேவன் புகழ் வாய்ந்தவர் போன்ற அனைவரையும் கடந்து சென்று, தன் பெயரைக் கையொப்பமிடவும் கூட அறியாத தாழ்மையுள்ள ஒரு ஏழை விதவைக்கு அதை அருளினார். அவள் என்ன கேட்பாள் என்பதை அவர் அறிந்திருந்தார். அதுதான் மிகப்பெரிய காரியம். அவளுடைய சகோதரி மரித்து விட்டாள், அவளுடைய பெற்றோர் என்றாவது ஒரு நாள் மரிக்க வேண்டும், பணம் அழிந்து போயிருக்கும். ஆனால், அவளுடைய பையன்களின் ஆத்துமாக்களோ நித்தியமானவை! அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நேரம் அதுவே. ''இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உன் பையன்களை உனக்குத் தருகிறேன்'' என்று நான் கூறின மாத்திரத்தில், அவர்கள் தங்கள் தாயின் மடியின் மேல் விழுந்தனர். இங்குள்ள எத்தனை பேருக்கு அது உண்மையென்று தெரியும். உங்களுக்குத் தெரியுமா? பார்த்தீர்களா? ஆம். ஏன்? ஆவியின் ஊக்கம். இப்பொழுது: ''உம்மால் அணில்களை சிருஷ்டிக்க முடியும் என்று உம்மைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன்; உம்மால் ஆட்டுக்கடாவை சிருஷ்டிக்க முடியும் என்று உம்மைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுதோ என் சொந்த கண்களால் உம்மைக் காண்கிறேன்'' தோற்றம், தரிசனம் காணக்கூடியதாகி விடுகிறது. தேவன் ஒன்றை வாக்களித்தால், அதை செய்து முடிப்பார். 73கவனியுங்கள், உங்களுக்கு யோசுவாவைப் போல் ஒருக்கால் தேவை எழலாம். யோசுவாவுக்குத் தேவையிருந்தது. அவன் சூழ்நிலையைப் பற்றி சிந்திக்கவேயில்லை. அவன் உரைத்தான். அது தேவன்! சூரியன் தரித்து நின்றதென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நானும் கூட. அது எப்படி நடந்தது? அதைக் குறித்தெல்லாம் சிந்தனை செய்யாதீர்கள், அது நடந்தது. யோசுவா அதை செய்தான், அவன் தன் கரங்களையுயர்த்தினான். அந்த கடினமான நேரத்தில் அவன் தேவனுடன் தொடர்பு கொண்டான். அது தான் அது நிறைவேறக் காரணமாயிருந்தது. அது சரியான நேரத்தில் நிகழ்ந்தது. ஜீவனுள்ள தேவனின் ஆவி அதற்கான தேவையை அறிந்து, யோசுவா அதைக் கூறும்படி அவனை உந்தினார். அதே தேவன் ஆபிரகாமின் தேவையை அறிந்திருந்தார். அதே தேவன், இந்த வேதவாக்கியம் உண்மையென்று எனக்கு உறுதிபடுத்த வேண்டுமெனும் அவசியத்தை அறிந்திருந்தார். அதே தேவன் முன் குறிக்கப்பட்ட அந்த இரு பையன்களின் தேவைகளை உணர்ந்து, அந்த நேரத்தில் அதை நிரூபித்து, அவர் வார்த்தையை உறுதிப்படுத்தினார். 74பரி.மாற்கு 14ல், ஒரு ஸ்திரீ அவரை விசுவாசித்ததாகக் காண்கிறோம். அவளுக்குத் தேவையிருந்தது. அவருடைய பாதங்கள் கழுவப்பட வேண்டிய அவசியமும் உண்டாயிருந்தது. அவள் செயல்பட அவள் ஊக்குவிக்கப்பட வேண்டியதாயிருந்தது, இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்... நாம் முடிப்பதற்கு முன்பு. அவள் செயல்பட, அவள் ஊக்குவிக்கப்பட வேண்டியவளாயிருந்தாள். ஏனெனில், அவள் ஏற்கனவே அவரைக் குறித்து கேள்விப்பட்டிருந்தாள். அவர் ஒரு வேசியின் பாவங்களை மன்னித்ததாக கேள்விப்பட்டாள். அவர், ''உங்களில் பாவமில்லாதவன் அவள் மேல் முதலில் கல்லெறியக் கடவர்கள்'' என்று அவர் கூறினதாக அவள் கேள்விப்பட்டிருந்தாள். அவள் அவரைக் குறித்து கேள்விப்பட்டிருந்தாள், இப்பொழுதோ அவள் அவரைக் காண்கிறாள். அவருக்கு பணிவிடை செய்ய வேண்டுமெனும் ஊக்கம் அவளுக்கு ஏற்பட்டது. அது ஒன்று மாத்திரமே உங்களுக்கு நேரிட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் தாமே, ''நீ ஒரு பாவி'' என்று உங்களிடம் கூறட்டும். பரிசுத்த ஆவியானவர் தாமே, ''நீ தவறு'' என்று உங்களிடம் கூறட்டும். பரிசுத்த ஆவியானவர் தாமே, ''நீ வேதப் பிரகாரமாகத் தவறு'' என்று வேதத்தைக் கொண்டு உங்களுக்கு நிரூபிக்கட்டும். ஏனெனில், அது ஒரே நேர்வழி வாய்க்கால் மூலமாக தேவனுடைய வேதவாக்கியங்கள் அனைத்தையும் உங்களுக்கு வெளிப்படுத்தித் தரும். அது ஒன்றையும் வெறுமனே விட்டுவிட்டு கடந்து செல்லாது. நீங்கள் அப்படி விட்டு விடுவீர்களானால், உங்களுக்கு ஒரு நன்மையும் உண்டாகாது. பரிசுத்த ஆவி உங்களை அதற்கென்று ஊக்குவிக்கும் போது, இந்த வாரத்தில் நாம் பார்த்த விதமாக, உங்கள் ஆத்துமா தேவனுடன் சரியாக இல்லாமல் போனால், அதனால் ஒரு நன்மையும் உண்டாகாது. கடைசி நாட்களில் கள்ள அபிஷேகம் பெற்றவர்கள் எழும்புவார்கள் என் பதை ஞாபகம் கொள்ளுங்கள். கள்ள இயேசுக்கள் அல்ல, கள்ள கிறிஸ்துக்கள் (அபிஷேகம் பெற்றவர்கள்) எழும்பி, கூடுமானால், தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள். 75கவனியுங்கள், அவருக்கு செய்ய வேண்டிய பணிவிடை ஒன்று அவளுக்கிருந்தது. அவள் அவரை குறித்து கேள்விப்பட்டிருந்தாள், இப்பொழுதோ அவளுடைய கண்களால் அவரைக் காண்கிறாள். அவள் செய்ய வேண்டிய பணிவிடை ஒன்றிருந்தது, ஆனால் அதைச் செய்வதற்கு சாதனங்கள் ஒன்றும் அவளிடம் இல்லை. இருப்பினும் அவள் பணிவிடை செய்ய அவரிடம் விரைந்தாள். அவருடைய பாதங்களைக் கழுவ தேவன் தண்ணீரையும், துடைக்க துணியையும் தந்தார். அவள் தன் வாழ்நாள் முழுவதும் ஜீவனுள்ள தேவனைக் குறித்து கேள்விப்பட்டிருந்தாள், ஆனால் இப்பொழுதோ தன் சொந்த கண்களால் அவரைக் கண்டாள். அது அவர் என்பதை அவள் அறிந்து கொண்டாள். ஆவியின் ஊக்கம் அவள் மேல் வந்தபோது, அவள், ''இவர் செய்தியாளர்'' என்றாள். அவருக்குப் பணிவிடை அவசியமாயிருந்தது (அவருக்கும் பணிவிடை செய்ய அவளிடம் ஒன்றுமில்லை); அவருடைய பாதங்கள் அழுக்காயிருந்தன, என்னவாயினும், அவருக்குப் பணிவிடை செய்ய அவள் அவரிடம் விரைந்தாள். ஏனெனில், அவள் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கப்பட்டாள். 76ஓ, பின் வாங்கிப் போன சபை அங்கத்தினனே. ஸ்தாபனத்தைச் சேர்ந்த மனிதனே, ஸ்திரீயே, இன்றிரவு இயேசுவுக்குள்ள தேவையை உன்னால் காண முடியவில்லையா? ஆவியின் ஊக்கம் மாத்திரம் உன்மேல் வருமானால், அதைச் செய்ய வேண்டிய நேரம் இதுவே. அவள் தன் சொந்த கண்களினால் அவரைக் கண்டாள், அங்கிருந்த மற்றவர்களோ அவரைப் பரிகாசம் செய்தனர். அவர்கள் அவருடைய செய்தியை விசுவாசிக்கவில்லை. வெளிப்படையாகக் கூறினால், அவரை அங்கு அழைத்திருந்த போதகரான சீமோன், அவரைப் பரிகாசம் செய்யவே அங்கு அழைத்திருந்தான். அவர் தீர்க்கதரிசியென்று அவர்கள் விசுவாசிக்கவில்லை. ''இந்த மனுஷன் தீர்க்கதரிசியாயிருந்தால், அவருடைய பாதங்களைத் தொடும் ஸ்திரீ எப்படிப்பட்டவள் என்பதை அறிந்து கொண்டிருப்பார்'' என்று கூறுவதற்கு சாத்தான் அவனுக்குள் கிரியை செய்ததாகத் தோன்றுகிறது. பாருங்கள், அவர் யாரென்று அவனுக்கு வெளிப்படக்கூட இல்லை. அவனை ஊக்கம் மேலிடவே முடியாது, ஏனெனில் ஊக்கம் வருவதற்கு அங்கு ஒன்றுமேயில்லை. ஆனால், அவளுக்கோ ஊக்கம் உண்டானது. 77சீமோனின் குற்றச்சாட்டுக்கு அப்பால் அவள் கண்கள் கண்டன. தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த வார்த்தை இவரே என்று அவள் விசுவாசித்தாள். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் அனைத்துமே அவரில் உறுதிப்படுத்தப்பட்டன என்பதை அவள் அறிந்து கொண்டாள். அவர் உலகில் இருந்தார் என்று அவள் கேள்விப்பட்டாள், ஆனால் இப்பொழுதோ அவள் அவரைக் காண்கிறாள். அவள் என்ன செய்தாளென்று கவனியுங்கள். வார்த்தை மாமிசமான மேசியாவை - இம்மானுவேலை - அவள் கண்டாள். அவளுடைய விசுவாசத் துடிப்புக்கு அவள் இடம் கொடுத்த போது. (அவர் யாரென்னும் வெளிப்பாடு; அவள் வாழ்ந்த காலத்தில், அவளைப் போன்ற பாவிகளுக்கு அவர் தேவ ஆட்டுக்குட்டி என்று), அவருடைய தேவைகளுக்காக பணிவிடை செய்ய, அதை எப்படி செய்வாள் என்றும் கூட அறியாமலேயே, அவள் விரைந்து சென்றாள். அப்படித்தான் உண்மையான சுகம் பெறுதல் கிடைக்கிறது. ''உங்களுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், உங்கள் அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்'' என்று உங்களுக்கு வெளிப்பட்டு, அவருடைய பிரசன்னத்தை இங்கு காணும் ஊக்கத்தை நீங்கள் பெற்று, பரி.மாற்கு 11... அல்லது பரி.லூக்கா 17:30ல் கூறப்பட்டுள்ள விதமாக, சோதோமின் அழிவுக்கு முன்பு அவர் தம்மை வெளிப்படுத்தினது போல், இந்த கடைசி நாட்களிலும் அவர் தம்மை (தமது ஜனங்களின் மத்தியில், மாமிச சரீரத்தில்) வெளிப்படுத்துவார் என்னும் உண்மையை நீங்கள் காணும்போது, ஏதோ ஒன்று உங்களுக்குள் பாய்கிறது. மருத்துவர்கள், ''புற்று நோய் இன்னும் இருக்கிறது'' எனலாம். நோயாளி, ''நான் எப்படி நடக்கப் போகின்றேன் என்று எனக்குத் தெரியாது. என்னவாயினும், நான் நடக்கப் போகின்றேன்'' எனலாம். அவன் எப்படி செய்யப் போகிறான் என்று நமக்குத் தெரியாது. 78அவருக்குப் பணிவிடை செய்ய அவள் முன் சென்றாள், ஏனெனில் அதுவே அந்த மணி நேரம், அவரே செய்தியாளர், அவரே சுகமாக்கக் கூடிய மேசியா என்னும் ஊக்கம் அவளுக்குள் பாய்ந்தது. அவள் அதை விசுவாசித்தாள். அவருக்கு பணிவிடை அவசியமாயிருந்தது, அவளால் அதை செய்யமுடியும் என்பதைக் காண்பிக்க, அவளிடம் ஒன்றுமில்லாமலே அவள் முன் சென்றாள். அவளுக்கு ஊக்கம் உண்டானதால் அவள் சென்றாள். கவனியுங் கள்! தேவன் அவளுடைய கண்களிலிருந்த கண்ணீர் சுரப்பிகளின் ஊற்றைத் திறந்தார். அவரைக் குறித்து கேள்விப்பட்ட அதே காதுகள்; அதைக் கண்ட அதே கண்கள் சந்தோஷத்தினால் கண் ணீர் சொறிந்தனர். பின்பு, தேவனால் அளிக்கப்பட்ட நீண்ட தலை மயிர், கண்ணீர் பெருக்கெடுத்து ஓடினது. தேவன் அவளுக்கு துவாலையைக் கொடுத்தார் (அவளுடைய தலைமயிர்) அதைக் கொண்டும், அவளுடைய கண்ணீரைக் கொண்டும், அவள் ஜீவ னுள்ள தேவனுக்கு பணிவிடை செய்து அவருடைய தேவைகளை நிறைவேற்றினாள். அவள் அவரைக் குறித்து கேள்விப்பட்டிருந்தாள், இப்பொழுதோ அவள் அவரைக் கண்டாள். அவளால் அவருக்குப் பணிவிடை செய்ய முடிந்தது. ஓ பாவியே! தேவைகளை இப்பொழுது நீ காணும் போது, நீயும் ஏன் அவ்விதமாகவே செய்யக்கூடாது? அவருக்கு நீ தேவை, உன் பணிவிடை தேவை! நீ ஒரு காலத்தில் வேதாகமத்தில் கேள்விப்பட்ட அவரை, இப்பொழுது காண்கிறாய். நேற்று இரவு அவர் இங்கு வந்ததை நாம் கண்டோம், அவர் என்ன செய்தாரென்று நாம் கண்டோம். ஒவ்வொரு கூட்டத்திலும் அவரை நாம் காண்கிறோம், ஆயினும் நாம் சில சமயங்களில் குளிருள்ளவர்களாயும் சிரத்தையற்றவர்களாயும் உட்கார்ந்து கொண்டு, ''ஆம், வேதாகமம் அதை கூறுகிறதென்று நானறிவேன், அது செய்யப்பட்டதை நான் கண்டிருக்கிறேன்'' என்கிறோம். நமக்கு உற்சாகமே இல்லை. அது நம்மை சரியானபடி பற்றியெரியச் செய்வதில்லை. நீங்கள் ஏதோ ஒன்றை உற்றுவது போல், பார்ப்பதற்கு அங்கு ஏதுவுமில்லை. 79ஒரு தீக்குச்சியை நாம் கொளுத்தும் போது, தீக்குச்சியின் தலையில் கந்தகம் இல்லாமல் போனால், அது எரியாது. நீங்கள் அதை எவ்வளவாக கொளுத்த முயன்றாலும், ஏதோ ஒரு இரசாயனம் அந்த கந்தகத்தை பாதித்திருக்குமானால், அது எரியாது, நெருப்பு உண்டாகாது. ஆனால் கந்தகம் அதில் இருந்தால்... அதைக் கொளுத்தும் போது, அது எரியும். அது போன்று, இக்கடைசி காலத்தின் செய்தியை யொட்டிய வேத வாக்கியங்கள் உண்மையாக உறுதிப்படுத்தப்பட்டு, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தைக் கண்டு, அவர் தமது வாழ்க்கையில் என்ன செய்தார் என்பதைக் குறித்து கேள்விப்பட்டு, வேதம், ''அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று கூறுகிறது என்பதை கேள்விப்பட்டவர்களாய், சோதோமின் நிலை தேவனுடைய கோபாக்கினையால் பற்றியெரிவதற்கு முன்பு, இயேசு மாமிச சரீரத்தில் தமது ஜனங்களின் மத்தியில் திரும்பவும் வந்து, அவர் முன்பு செய்தவைகளையே இப்பொழுது செய்வதைக் காணும் போது! என்னே, அது நமது ஆத்துமாக்களை மகிமையால் நிரப்ப வேண்டும். அது நமக்கு ஒன்றைச் செய்ய வேண்டும். ஏன்? அது ஆத்துமாக்களின் மேல் விழுகிறது. 80அவர் என்ன செய்தார் என்று வேதத்தின் மூலம் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் - அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள் என்றும், அவர் திரும்பிப் பார்த்து அவளுக்கிருந்த வியாதி என்னவென்று கூறி, அவளுடைய விசுவாசம் அவளை குணமாக்கினது என்றும் உலகமானது சோதோமின் நிலையையடைந்து, அது எரிக்கப்படுவதற்கு சற்று முன்பு, அவர் அதே செயலை மறுபடியும் புரிவதாக வாக்களித்துள்ளார், புதிய ஏற்பாடு, தீர்க்கதரிசி, தேவன் - தீர்க்கதரிசி, தீர்க்கதரிசிகளுக்கெல்லாம் தீர்க்கதரிசி, எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் தேவன், தேவத்துவத்தின் பரிபூரணத்தை சரீரத்தில் கொண்டவர்..... மாமிசத்தில் வெளிப்பட்டவர், ஆதியாகமத்தில் கூறப்பட்ட சிருஷ்டிகர்த்தர். அல்லேலூயா! அது அவருடைய வார்த்தை! அது நிகழும் என்று அவர் கூறியுள்ளார். நாம் சோதோமின் நிலையைக் காண்கிறோம், உலகம் அந்நிலையை அடைந்துள்ளதை நாம் காண்கிறோம், அவர் இறங்கி வந்து அவர் என்ன செய்வாரென்று கூறினாரோ, அதையே செய்வதை இப்பொழுது நாம் காண்கிறோம். அவரைக் குறித்து கேள்விப்பட்டோம், இப்பொழுதோ அவரைக் காண்கிறோம்! ''என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.'' ஆமென், ''என் சொந்தக் கண்களினால் அவரைக் காண்கிறேன்.'' இது எப்படிப்பட்ட நேரமாக இருக்க வேண்டும்! அவருடைய வார்த்தை உறுதிப்படுதல்! அவருடைய வார்த்தை உறுதிப்படும் போதெல்லாம், தேவன் தமது வார்த்தையில் பேசி, நீங்கள் காண வேண்டுமென்று தம்மை காணக் கூடியவராகச் செய்து கொள்கிறார். 81இங்கு தெருவில் இருந்த ஒரு வேசி, பீடத்துக்கு முன்னால் (இயேசுவுக்கு முன்னால்) விழுந்து, அவளுடைய கண்ணீரால் அவருடைய பாதங்களைக் கழுவி, அவளுடைய தலைமயிரால் அவைகளைத் துடைத்தாள். தேவன் அதை கனப்படுத்தினார். அவர், ''இந்த சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ, அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும்'' என்றார்; (மத்;28:13, மாற்கு;14:9). ஏன்? அவள் எவ்வளவு மோசமானவள் என்று பாருங்கள், ஆனால் ஏதோ ஒன்று அவளுக்குள் பாய்ந்தது. அவள் ''ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும்'' என்று ஏதேன் தோட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின் வார்த்தையைக் கண்டு கொண்டாள். கன்னிகையின் மூலம் பிறந்த மேசியாவை அவள் அறிந்து கொண்டாள். அவர் கன்னிகையின் மூலம் பிறக்க வேண்டுமென்று அவள் கேள்விப்பட்டாள். அவர் உலகிலிருப்பதாக அவர்கள் கேள்விப்பட்டனர். ஒரு வாலிப ரபீ, தீர்க்கதரிசி, வியாதியஸ்தரை சுகமாக்குகிறார் என்று அவள் கேள்விப்பட்டாள். அவள் அதை விசுவாசித்தாள்! இதோ அவள் தெருவின் வழியாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு வருகிறாள். அவள் பார்த்தபோது, அந்த பெரிய விருந்து அங்கு நடந்து கொண்டிருக்கிறதைக் கண்டாள். அவள் வேலியினருகில் மெல்ல நழுவிச் சென்று உள்ளே பார்த்த போது, அவர் அங்கிருந்தார். ஏதோ ஒன்று ''அது தான் அவர்!'' என்று கூறினது. பாருங்கள், அவளுக்கு அவசியமாயிருந்ததெல்லாம் அவள் ஊக்குவிக்கப்பட வேண்டியதே. என்ன நடந்ததென்று பார்த்தீர்களா? தேவனுடைய வார்த்தை மாமிசமானதை அவள் கண்டாள். அவள் காதால் கேட்விப்பட்டிருந்தாள். இப்பொழுதோ அவளுடைய கண்ணால் அவரைக் கண்டாள். 82கடைசி காலத்தில் சபையின் நிலை என்னவாயிருக்கும் என்று வேதத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ளதை எல்லோருமே அறிவர். தற்போதைய நிலையில் சபை தேவனுடைய கட்டளைகளை - மணவாட்டியை வெளியே அழைக்க வேண்டுமெனும் அந்த மகத்தான கட்டளையை நிறைவேற்ற முடியாது. எந்த சபை அதை செய்யும்? பெந்தெகொஸ்தேயினரா? இல்லையென்றே நான் சொல்லுவேன். மற்றெந்த சபையுமே அப்படி செய்யாது. பெந்தெகொஸ்தேயினர் கோதுமையின் மேலுள்ள பதர். அது தோன்றி, கோதுமையைப் போலவே காணப்பட்டது. ஆனால் அது கோதுமை இல்லை. அது திறக்கிறது. அதிலிருந்து கோதுமை வருகிறது. அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு தங்களை கொன்று விட்டனர். அங்கு தான் அவர்கள் மரிக்கின்றனர். அவர்கள் தண்டுகளாயிருந்தனர். கோதுமை அதன் வழியாக வர வேண்டும். இப்பொழுது அது மணவாட்டி உருவில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இருளின் காலங்களில் நிலத்தில் விழுந்த கோதுமை மணி சாக வேண்டியதாயிருந்தது. 83அந்த குற்றம் கண்டு பிடிப்பவர், ''சிவந்த சமுத்திரத்தைப் பிளந்த அந்த இரக்கமுள்ள தேவன், அந்த ஏழை கிறிஸ்தவர்கள் சிங்கங்களுக்கு இரையாகி, சுட்டெரிக்கப்பட்டு, துன்பம் அனுவித்த போது, ஏன் பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தார்? அதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் என்பது போல் தோன்றுகிறதே'' என்றார். பாவம் ஒன்றுமே அறியாத ஏழை மனிதன்! “கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால்'' என்பதை அவர் அறிந்திருக்கவில்லை போலும்! மற்றெந்த கோதுமை மணியைப் போல, இதுவும் இருளின் காலங்களில் செத்து, லூத்தரின் முதலாம் சீர்திருத்த காலத்தின் போது தண்டை தோன்றச் செய்ய வேண்டியதாயிருந்தது. வெஸ்லியன் காலமாகிய அந்த மகத்தான மிஷனரி காலத்தில் அது மகரந்தப் பொடியைத் தோற்றுவித்தது. பெந்தெகொஸ்தேயினரின் காலத்தில் அது வரங்களைத் திரும்ப அளித்து, தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஏறக்குறைய வஞ்சித்தது (காண்பதற்கு கோதுமை மணியைப் போலிருந்தது). அதை திறந்து பார்த்த போது, அங்கு கோதுமையே இல்லை, பதர் மாத்திரமே. அவர்கள் ஒருத்துவம் ஸ்தாபனம், திரித்துவம் ஸ்தாபனம், இருத்துவம் ஸ்தாபனம், தேவ சபை ஸ்தாபனம், போன்ற ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டனர். அது மரணத்தை விளைவித்தது. இப்பொழுது என்ன நடக்கிறது? அது கோதுமைக்கு பாதுகாப்பான இடமாக அமைந்திருந்தது. அதனுள் கோதுமை வளர்ந்து கொண்டே வந்தது. இப்பொழுது பதர் விலகத் தொடங்கி விட்டது, கோதுமை காணப்படுகிறது. இது பெந்தெகொஸ்தேகாலம் அல்ல, இது கடைசி நாள் காலம், இது மணவாட்டியின் காலம். இது சாயங்கால வெளிச்சம் இது தேவனுடைய அமைப்பைப் பின்பற்றுவதற்கு மல்கியா 4 நிறைவேற வேண்டிய காலம். இது லூக்கா;17:30 நிறைவேற வேண்டிய காலம்... எரேமியா, யோவேல் இன்னும் மற்றவர் இந்த நாட்களைக் குறித்து முன்னுரைத்துள்ளனர். அது தான் இந்த நாள்! ''கர்த்தாவே, அது வரப்போகிறது என்று நான் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ என் கண்ணால் அதைக் காண்கிறேன்.'' 84அநேகர்... போலியாட்கள் எத்தனை பேர் எழும்பின போதிலும், மோசே செய்ததையே செய்த யந்நேயும், யம்பிரேயும் எழும்பின போதிலும், அது மோசேயையும், ஆரோனையும் அசைக்கவேயில்லை. அவர்கள் அறிந்திருந்தனர்.... யோபைப் போல் அவர்களும், அவர்களுடைய ஊக்கம் யாரிடமிருந்து வந்ததென்பதை அறிந்திருந்தனர். அது கர்த்தர் உரைக்கிரதாவது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களைக் குறித்து பேசின அதே வேதாகமம், ''கடைசி நாட்களில் போலியாட்கள் எழும்புவார்கள்'' என்று உரைத்துள்ளது. அந்த மத சம்பந்தமான ஸ்தாபனங்கள், ஏதாவதொன்று தொடங்கும் போது.... முதலில் அதை தொடங்கினது யார்? மோசேயா அல்லது அவர்களா? அவர்கள் முதலில் தொடங்கியிருந்தால், மோசே அவர்களைப் பாவனை செய்தவனாக இருந்திருப்பான். இப்பொழுது எல்லாவிதமான சிந்தனையைப் பகுத்தறிபவர்களும் நம்மிடையே உள்ளனர், அவர்கள், தேவன் தமது வேத வாக்கியங்களின் மூலம் உண்மையென நிரூபித்துள்ள அந்த உண்மையான ஒன்றிலிருந்து உங்கள் மனதை விலக்கப் பார்க்கின்றனர். நமது காதால் அதைக் குறித்து கேள்விப்பட்டோம். இப்பொழுதோ நமது கண்ணால் அதைக் காண்கிறோம். ஆமென்! அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும்? ஆவியின் ஊக்கம்! மனுஷகுமாரன் ஒரு மனுஷகுமாரன் மூலம் வெளிப்படும் அந்த நாளில், இயேசு கிறிஸ்து தமது ஜனங்களின் மத்தியில் தோற்றமளிக்கிறார். 85ஆபிரகாமுக்கும் அவனுடைய குழுவுக்கும் முன்னால் ஒரு மனிதன் நடந்து வந்தார். அவர் சாதாரண மனிதனாகக் காணப்பட்டார், அவருடைய உடையில் அழுக்கு படிந்திருந்தது. அவருடைய முதுகு கூடாரம் பக்கம் திரும்பியிருந்தது. அவர், ''உன் மனைவி சாராள் எங்கே?'' என்றார். ''(சா-ரா-ள், சா-ரா-ய் அல்ல; ஆ-பி-ர-கா-ம், ஆ-பி-ரா-ம் அல்ல, அவனுடைய பெயரைக் கூப்பிட்டு, அவள் எங்கே?'' என்று கேட்டார். அவன் உமக்குப் பின்னால், கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். அவர், ''ஒரு உற்பவ கால திட்டத்தில் உன்னிடத்தில் திரும்ப வருவேன்'' என்றார், (அவள் இரகசியமாக நகைத்தாள்). அவர், ''அவள் ஏன் நகைத்தாள்?'' என்று கேட்டார். (உ-ஊ), அவர் வாக்குத்தத்தம் செய்திருந்தார். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர்நோக்கி இருந்தனர். ஸ்தாபனத்திலுள்ளவர்கள் எவ்வளவாக தாங்கள் கிறிஸ்துவை எதிர் நோக்கியிருப்பதாக நடித்தாலும் எனக்குக் கவலையில்லை, அவர்களுடைய செயல்கள் அவர்கள் எதிர் நோக்கியிருக்கவில்லை என்பதை நிரூபிக்கின்றன். அது உண்மை. உங்கள் செயல்கள் உங்கள் வார்த்தைகளைக் காட்டிலும் உரக்கப் பேசுகின்றன. அவர்கள் எப்பொழுதுமே ஸ்தாபனத்தில் அங்கத்தினர்களைச் சேர்ப்பது பற்றியே யோசித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதில் கர்த்தருடைய வருகையை எதிர்நோக்கியுள்ள சிலர் ஒருவர் இங்கும் ஒருவர் அங்குமாக உள்ளனர். அவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மாத்திரமே அவர் தம்மை வெளிப்படுத்துவார், அவர்கள் மாத்திரமே புரிந்து கொள்வார்கள். 86அவர் யாரென்று தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே புரிந்து கொண்டனர். சற்று யோசித்து பாருங்கள், உலகில் ஏறக்குறைய முப்பது லட்சம் யூதர்கள் இருந்திருக்கக் கூடும். ஆனால், அவர் வந்து போனதைக் குறித்து அவர்களில் மூன்றில் ஒரு பாகம் கூட அறியவில்லை. பாருங்கள்? ஆனால் அவருக்காக காத்திருந்தவர்களுக்கு அவர் தம்மை வெளிப்படுத்தினார்: யோவான் ஸ்நானன், யோவானால் அழைக்கப்பட்ட சீஷர்கள், தேவாலயத்தில் இருந்த குருடான அன்னாள், ஆசாரியனாகிய சிமியோன் போன்றவர்களுக்கு. சிமியோன் கிறிஸ்துவைக் காண்பான் என்று அவனுக்கு பரிசுத்த ஆவியின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் மற்ற மதத்தலைவர்களும், வேத பண்டிதர்களும் மிகவும் குருடாயிருந்தனர். விதை அங்கு ஏற்கனவே இருந்தால் மாத்திரமே மழை அதை விளையச் செய்ய முடியும். நீங்கள் உங்கள் தந்தைக்குள் ஒரு கிருமியாயிருந்தீர்கள். அவர் உங்களை அறியவில்லை. இருப்பினும் நீங்கள் உங்கள் தந்தைக்குள் இருந்தீர்கள். ஆனால் உங்கள் தாய் என்னும் நிலத்தின் மூலம், அவருடைய சாயலில் நீங்கள் தோன்றினீர்கள், அப்பொழுது அவர் உங்களுடன் பேச முடிந்தது. தேவன், மகத்தான தேவன்; உங்களுக்கு நித்திய ஜீவன் இருக்குமானால் நித்திய ஜீவனின் கிருமி துவக்கத்திலே தேவனுக்குள் இருந்தது. நீங்கள் அங்கு இருந்தீர்கள். அவருடைய சிந்தனையில் நீங்கள் இருந்தீர்கள் - உங்கள் பெயரும் மற்றவையும். அவர் தமது முன்னறிவின்படி, நீங்கள் இதைக் காண உங்களை முன்குறித்தார். அப்படி முன் குறிக்கப்படாதவர்கள் அதை காணவே மாட்டார்கள். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், ''அந்த வேளை இங்குள்ளது.'' அவரை நீங்கள் விசுவாசிக்க மாட்டீர்களா? உங்கள் வாழ்க்கையை அவருக்குக் கொடுங்கள். இப்பொழுது நான் நிறுத்த வேண்டும், ஒன்பது மணி தாண்டிவிட்டது. நாம் தலை வணங்குவோம்: 87கர்த்தர, உம்மைக் குறித்து நான் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ உம்மை நான் காண்கிறேன். கர்த்தராகிய இயேசுவே, இந்த ஜனங்கள் காத்திருக்கும் இந்நேரத்தில் அவர்களை ஆசிர்வதியும். உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகின்றேன். பரிசுத்த ஆவி உங்கள் சிந்தனைகளை ஆராயவும் (அவர் அப்படி செய்வாரென நம்புகிறேன்), உங்களை பரீட்சிக்கவும், உங்கள் ஆத்துமாவைப் பரீட்சித்து நீங்கள் உண்மையாக விசுவாசிக்கிறீர்களா என்று அறிந்து கொள்ளவும் அவரை விட்டு கொடுக்கப் போகின்றேன். அங்கு சிறிது சந்தேகம் இருப்பதாக நீங்கள் கண்டாலும், உங்கள் கரங்களையுயர்த்தி, ''கர்த்தராகிய இயேசுவே, உம்மை நான் காணட்டும். உம்மைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால், உண்மையில் உம்மை நான் கண்டதில்லை. உம்மை நான் காணட்டும், நான் விசுவாசிப்பேன்'' என்று கூறுவீர்களா? சரி. அது நல்லது. அவரை இரட்சகராக அறிந்திராத சிலர் இங்குள்ளனரா? உங்கள் கரங்களையுயர்த்தி, ''நான் ஒரு பாவி....ஆனால் கர்த்தராகிய இயேசுவே, உம்மைக் காண என்னை அனுமதிப்பீரானால், இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இந்த வார்த்தையை வெளிப்படுத்தும். அப்படித்தான் யோபு உம்மைக் கண்டானென்று நானறிவேன். அப்படித்தான் ஆபிரகாம் உம்மைக் கண்டானென்று அறிவேன். மற்றவர் அனைவருமே அந்த விதத்தில் தான் உம்மைக் கண்டனரென்று நானறிவேன், ஏனெனில் அது நீர் வாக்குத்தத்தம் செய்திருந்த வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது. நான் எல்லாவிதமான காரியங்களைக் குறித்தும், தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள செய்யப்படும் செயல்களைக் குறித்தும் (gimmicks) கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், 1933ம் ஆண்டில் நதிக்கரையில் ஒரு தேவதூதனால் குறிப்பிடப்பட்ட ஒரு கடைசிகால செய்தி இத்தேசத்தில் உள்ளதாக கேள்விப்படுகிறேன். சுகமளிக்கும் ஆராதனைகள் நடந்து கொண்டிருப்பதாக கேள்விப்படுகிறேன். அது நடக்கும் போது, ''அது அந்த பழைய ஸ்தாபன பாதையில் தங்கிவிட முடியாதென்பதை அறிகிறேன்'' என்று கூறுங்கள். அதற்காக அது அனுப்பப்படவில்லை, அது அங்கு தங்கிவிடவில்லை (ஒலி நாடாவில் காலி இடம்-ஆசி)... நீங்கள் அவரைக் காண விரும்புகிறீர்கள். 88மோசே அங்கு வந்து, ''நோவாவைப் போல் நாம் ஒரு பேழையை உண்டாக்கி, நதியில் மிதந்து எகிப்தை விட்டு செல்லலாம்'' என்று கூறியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? ஓ, முடியாது. பாருங்கள்? இல்லை! அவன் தேவனிடமிருந்து ஒரு செய்தியைக் கொண்டிருந்தான், அவன் ஒரு வெளிப்பாடாகத் திகழ்ந்தான். காட்சியில் தீர்க்கதரிசி எழும்பின் அந்த செயலே இஸ்ரவேலருக்கு அங்கேயே நிரூபித்திருக்க வேண்டும் (அவர்களுக்கு நானூறு ஆண்டுகளாக ஒரு தீர்க்கதரிசி இருக்கவில்லை, இங்கே ஒரு தீர்க்கதரிசி கடைசியில் எழும்புகிறான்). ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது என்று அவர்கள் அறிந்து கொண்டிருக்க வேண்டும். மறுபடியுமாக இஸ்ரவேலருக்கு நானூறு ஆண்டுகளாக ஒரு தீர்க்கதரிசி இருக்கவில்லை, இதோ இயேசு காட்சியில் தோன்றினார். கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீ, ''ஐயா, நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். எங்களுக்கு நானூறு ஆண்டுகளாக தீர்க்கதரிசி இருக்கவில்லை'' என்கிறாள். ஏனெனில், அவளுடைய இருதயத்தில் என்ன இருந்தது என்பதை அவர் அறிந்து கொண்டார். 89சீர்திருத்தக்காரரின் மூலம் நமக்கு ஒரு சபை காலம் வாக்களிக்கப்பட்டது. அதை நாம் பெற்றோம். ஆனால் கடைசி நாட்களில் என்ன நேரிடும் என்னும் அவருடைய அமைப்பை (Pattern) அவர் மல்கியா 4ல் வாக்களித்துள்ளார்: பிள்ளைகளின் இருதயங்களை அப்போஸ்தல பிதாக்களின் விசுவாசத்துக்குத் திருப்புதல். அந்த நோக்கத்துக்காகவே! சபையானது ஸ்தாபனங்களாகவும் தத்துவங்களாகவும் உடைந்து போய், மரித்துப்போன நிலையில் உள்ளது. அது சுமக்கும் கருவியாக இருந்து வந்தது. ஏழாம் தூதனின் செய்தியின் போது, ஏழு முத்திரைகளின் இரகசியம் வெளிப்படுமென்றும், தேவ ரகசியங்கள் அறிவிக்கப்படுமென்றும் (வெளிப்படுத்தல் 10) அவர் வாக்களித்துள்ளார். ஏழாம் தூதன் தன் செய்தியை முழங்கும் போது - சுகமளிக்கும் ஆராதனையல்ல, சுகமளிக்கும் ஆராதனையைத் தொடரும் செய்தி. 90இயேசு பிணியாளிகளை சுகப்படுத்தின வரைக்கும் அவர், ''பெரிய மனிதனாக கருதப்பட்டார். ஆனால் அவர், நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்'' என்று சொன்னபோது, ''ஆ, ஆ! அது தவறு'' என்றனர். ஏதோ ஒன்று யோபுக்கு நடக்கும் வரை, அவன் பெரியவனாக இருந்தான். பாருங்கள்? அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. விசுவாசியுங்கள்! அவரை இப்பொழுது ஏற்றுக் கொள்வீர்களா? உங்கள் கைகளையுயர்த்தி, ''நான் அவரை விசுவாசிக்கிறேன், அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக, தேவன் ஆசிர்வதிப்பாராக. அது நல்லது. இப்பொழுது அமைதியாக உட்கார்ந்து சற்று நேரம் ஜெபத்தில் தரித்திருங்கள். 91அன்புள்ள தேவனே, இந்த அமைதியான நேரத்திலே, இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் என்றாவது ஒரு நாளில் இடி முழங்கும். அப்பொழுது தேவனுடைய குமாரன் ஆரவாரத் தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழுந்திருப்பார்கள். பிதாவே, நாங்கள் அளிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும், நாங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் கூற வேண்டியவர்களாயிருக்கிறோம் என்று நாங்கள் ஒவ்வொருவரும் இன்றிரவு அறிந்திருக்கிறோம். எங்கள் இரு தயங்களிலுள்ள சிந்தனைகளுக்கும் கூட நாங்கள் பதில் கூற வேண்டியவர்களாயிருக்கிறோம். இங்குள்ள ஒவ்வொரு இருதயத்தையும் நீர் சுத்திகரிக்க வேண்டுமென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். என் இருதயத்தை சுத்திகரியும், இந்த ஜனங்களின் இருதயத்தை சுத்திகரியும். கர்த்தாவே, சர்வவல்லமையுள்ள தேவனின் மகிமையை இன்றிரவு காண எங்கள் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு, அதற்கென்று நாங்கள் ஆயத்தமாகட்டும். ஓ பிதாவே, அவரைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். தேவனே, அவரைக் காண எங்களுக்கு அருள்புரியும். பிதாவே, இதை அருளும். இந்த ஆசிர்வாதங்களை எங்களுக்கு அருளுமாறு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். 92ஞாபகங் கொள்ளுங்கள்: நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்திலேயே, உங்கள் இருதயத்தில் ஒரு சிறு பீடத்தை உண்டாக்கிக் கொள்ளுங்கள். ''கர்த்தராகிய இயேசுவே, என் இருதயத்தில் இப்பொழுது வாரும். நான் இறுகப் பற்றிக் கொள்ள ஏதாவதொன்றைத் தாரும். நீர் 'இங்கிருக்சிறீர்' என்று என்னிடம் கூறும் ஆவியின் ஊக்கத்தை நான் உணரட்டும்'' என்று கூறுங்கள். ஜனங்களிடம் கூறுவதற்கு அது எப்படிப்பட்ட ஒரு வாக்குமூலம்! செய்வதற்கு அது எப்படிப்பட்ட ஒரு காரியம்! நான் இப்பொழுது தேவனாகிய கர்த்தரைக் கேட்கப் போகின்றேன்... உங்களில் எத்தனை பேர் ஒலிநாடாக்களைக் கொண்டு செல்கிறீர்கள்? ''ஐயன்மீர், இதுவா சமயம்?'' என்னும் செய்தியைக் கேட்டிருக்கிறீர்களா? நாங்கள் அந்த பத்திரிக்கைகளை உங்களுக்குக் காண்பித்தோமா? அது நிகழ்வதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு விஞ்ஞானத்துக்கு அது புதிராயுள்ளது. அங்கு கர்த்தராகிய இயேசு, நீங்கள் வேதத்தில் வெளிப்படுத்தல் 1லும், தானியேல் புத்தகத்திலும் காண்பது போல், வெள்ளைத்தலையங்கியை (wig) அணிந்து கொண்டு, வானத்துக்கும் பூமிக்கும் பிரதான நியாயாதிபதியாக இருக்கிறார். விஞ்ஞானத்தால் அது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. வான்நிலை ஆராய்ச்சி நிலையத்திலும், அரிசோனா பல்கலைக் கழகத்திலும், மெக்ஸிகோவிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால், அது நிகழுமென்று உங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. 93அவாஸ்காவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியைக் குறித்து என்ன? ஹாலிவுட் கடலுக்குள் மூழ்குவதைக் கவனியுங்கள்! ஊ, ஊ, அது மூழ்கின்றதா என்பதைக் கவனித்து வாருங்கள். அவர் இதுவரைக்கும் தவறான ஒன்றை எனக்கு அறிவித்ததேயில்லை. பாருங்கள்? அது நிச்சயம் நிறைவேறும். நாம் சரித்திரம் முடியப்போகும் நேரத்தில் வாழ்ந்து வருகிறோமா என்பதையும் கவனித்து வாருங்கள். அவர் வரும் நாழிகையை எந்த மனிதனுமே அறியான். ஆனால் ஒன்றை மாத்திரம் நான் அறிவேன்: என் தற்போதைய நிலையில், நான் தெளிந்த புத்தியுள்ளவனாயிருந்து, கிறிஸ்தவனாக இல்லாமலிருந்தால், நான் நிச்சயம் உண்மையான வேதாகமக் கிறிஸ்தவனாக இருக்க விரும்புவேனே தவிர, ஒரு ஸ்தாபனக் கிறிஸ்தவனாக அல்ல. நீங்கள் கூச்சலிடுவதனால், அதன் மேல் சார்ந்திருக்க வேண்டாம். இன்று காலை அதைக் குறித்து நாம் கேட்டோம், அதை தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நிரூபித்தோம். அது முற்றிலும் தேவனுடைய சித்தத்துக்கு அப்பாற்பட்டதாயுள்ளது. அது மரணத்தை விளைவிக்குமே தவிர வேறொன்றையும் செய்யாது. நீங்கள் தண்டில் இருக்க வேண்டாம், ஜீவனில் இருங்கள். பாருங்கள்? தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள். 94இந்த வாக்குத்தத்தத்தை செய்த தேவன், ஆதியாகமம் புத்தகத்திலே தோன்றின தேவன், ஆபிரகாமிடம் தோன்றி அந்த அற்புதத்தைச் செய்த தேவன்.... அதே தேவன் மனித சரீரம் கொண்டவராய் ஒரு கன்னிகையின் மூலம் பிறந்தார் என்று விசுவாசிக்கிறீர்களா? துப்பொழுது அவர் 'தியாஃபனி' (theophany) சரீரத்தில் வந்தார் என்பது உண்மையே. ஆனால் அவர் மனித சரீரத்தில் தோன்றி, அதே மனிதனாக, அதே கிரியைகளைச் செய்தார். இப்பொழுது தேவன் ஒரு மனிதனை, அவர் அவன் மூலம் பேசுவதற்கு, ஒரு வாய்க்காலாகத் தெரிந்து கொண்டு (மல்கியா 4கின்படி, அவர் அவ்வாறு செய்வதாக வாக்களித்துள்ளார்). அவர் செய்யப் போவதாக வாக்ளித்துள்ள அதே செயல்களைப் புரிய முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் அப்படி செய்வாரென்று நானும் விசுவாசிக்கிறேன். அவருடைய வஸ்திரத்தைத் தொடுவதற்கு உங்களுக்கு விசுவாசம் - அவருடைய விசுவாசம் - இருக்க முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது இங்கு ஏதோ ஒன்று இருந்து கொண்டு அவருடைய வஸ்திரத்தை தொடுவதற்கு உங்களுக்கு விசுவாசம் உள்ளது என்று உங்கள் இருதயத்தில் பேசிக் கொண்டிருக்கிறதென்று நீங்கள் விசுவாசிக்றீர்களா? நீங்கள் அப்படி செய்ய முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா? அதாவது, நீங்கள் எப்படி உங்கள் விசுவாசத்தால் - உங்கள் உணர்ச்சிவசத்தால் அல்ல - உங்கள் தூய்மையான கலப்படமற்ற விசுவாசத்தால் அவரை முற்றிலுமாகத் தொட முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா? ''கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன். என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். நீர் என்னைத் தொட வேண்டுமென்று விரும்புகிறேன். ஏனெனில் நீர் அவ்வாறு செய்துள்ளதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன், இப்பொழுதோ என் சொந்த கண்களால் அதை காண விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். பாருங்கள்? நான் உங்களைத் தொட முடியாது. தொடுதல் என்பது தேவனால் மாத்திரமே முடியும். அவர் அப்படி செய்வாரென்று விசுவாசிக்கிறீர்களா? 95நான் என் இடது பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் ஏற்கனவே கூறினபடி ஒரு வாய்க்கால் அந்த பக்கம் இழுப்பதாகத் தோன்றுகிறது. நான் அந்த பக்கம் அதை திருப்பினபடியால், அது அற்புதமாய் அமைந்துள்ளது. அது கணவனுடன் அமர்ந்திருக்கும் ஒரு பெண். அவள் இந்த இடத்தைச் சேர்ந்தவள் அல்ல. அவள் டெக்ஸாஸிலுள்ள டல்லாஸ் என்னுமிடத்திலிருந்து வந்திருக்கிறாள். அவளும் வியாதிப்பட்டிருக்கிறாள், அவளுடைய கணவனும் வியாதிப்பட்டிருக்கிறார் அவளுக்கு சிக்கலான வியாதியுள்ளது. அவளுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அது உண்மை. அவளுடைய கணவருக்கு முதுகு கோளாறு உள்ளது. டெக்ஸாஸிலுள்ள டல்லாஸிலிருந்து வந்திருக்கும் திரு மற்றும் திருமதி கார்பெட். அது உண்மையானால், உங்கள் கைகளையுயர்த்துங்கள். நான் உங்களுக்கு அந்நியன். அது உண்மையா? உங்களுக்குள்ள வியாதி என்னவென்று அறிய எனக்கு உலகில் ஒரு வழியுமில்லை. அது என்ன? ''என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ உம்மைக் காண்கிறேன்.'' நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அந்த தம்பதிகளை கேட்டுப் பாருங்கள். அவர்களை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. ''என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.'' நீ விசுவாசித்தால், உன் தேவைகளைத் தேவன் அருளுவார். 96உயர்ந்த இரத்த அழுத்தத்துடன், அவரது தாடை மீது கையை வைத்துக் கொண்டு, அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த மனிதன். ஐயா, தேவன் உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்படி கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பவரே, தேவன் உயர்ந்த இரத்த அழுத்தத்திலிருந்து உங்களை குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால், உங்கள் கையையுயர்த்துங்கள், சரி, அவர் விசுவாசிக்கிறார். அந்த மனிதனை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. அவரைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. இயேசு இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வார் என்று அவர் வேதத்தில் கூறியுள்ளதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், இப்பொழுது அதைக் காண்கிறீர்கள். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? ''நீ விசுவாசித்தால், எல்லாம் கூடும். விசுவாசிக்கிறவர்களுக்கு மாத்திரமே!'' அதைச் செய்ய உண்மையான விசுவாசம் அவசியம். நீங்கள் விசுவாசித்தால், தேவன் அதை உங்களுக்கு அருளுவார். 97பின்னால் ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்குத் தொண்டையில் கட்டி (goiter) உள்ளது. அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஸ்திரீக்கு உயர்ந்த இரத்த அழுத்தம் உள்ளது. அது உண்மை. அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஸ்திரீக்கும் கோளாறு உள்ளது. அவள் இந்த இடத்தைச் சேர்ந்தவள் அல்ல. அவள் ஆர்கன்ஸாஸிலிருந்து வந்திருக்கிறாள். அவர்கள் அதை காணத் தவறுகின்றனர். திருமதி. பிலிப்ஸ், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து சுகத்தைப் பெற்றுக் கொள்வாயாக! அவரை நீ விசுவாசிக்கிறாயா? உன் முழு இருதயத்தோடும்? அதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? அப்படியானால், நீ அதை பெற்றுக்கொள்வாய். ''இது மர்மமாயுள்ளதே'' என்று நீங்கள் கூறலாம். இல்லை! இல்லை! இயேசு, ''உன் பெயர் சீமோன். நீ யோனாவின் குமாரன்'' என்றார். அது சரியா? ''என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது'' என்ன நடந்ததென்று நீங்கள் கண்டீர்கள் அல்லவா? யாரோ ஒருவர் அங்கு உட்கார்ந்து கொண்டு, பார்த்துக் கொண்டு, விசுவாசிக்கிறார். திடீரென்று அது நடக்கிறது. பாருங்கள்? 98மகனே, நேற்று இரவைக் காட்டிலும் இன்றிரவு அதிக சுகம் தோன்றுகிறதா? அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பவன். அது இப்பொழுது சரியாகி விடும், நீ குணமாகி விடுவாய். நேற்று இரவு இங்கு உட்கார்ந்து கொண்டு தலையை மோதிக் கொண்டிருந்தவன் இன்று மரியாதையுள்ளவன் போல் காணப்படுகிறான். பாருங்கள்? அவன் காரியங்களைக் குறித்து சற்று குழப்பமுற்றிருந்தான். இப்பொழுது எல்லாம் தெளிவாகி விட்டது. பாருங்கள்? அது சரியாகி விடும். பாருங்கள்? ''சோதோம் எரிவதற்கு முன்பு, மனுஷகுமாரன் வெளிப்படும் அந்த நாளில்.'' என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. இயேசு கிறிஸ்து இதை வாக்குத்தத்தமாக உரைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன், இப்பொழுதோ அந்த வாக்குத்தத்தம் உயிர் பெற்றுள்ளதைக் காண்கிறேன். பாருங்கள்? ''என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ என் கண் அவரைக் காண்கிறது'' அது அவர் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? ஓ தேவனே... 99இப்பொழுது, நாம் இங்குள்ள போது... தாமதமாகிக் கொண்டிருக்கிறது. நாளை இரவு ஒரு மகத்தான சுகமளிக்கும் ஆராதனை நமக்கிருக்கும். நானும் சகோ. மூரும் இங்கு நின்று கொண்டு ஜெப வரிசையில் வர விரும்பும் ஒவ்வொரு நபருக்கும் ஜெபிப்போமென்று எதிர்பார்க்கிறோம். இன்றிரவு இதை பேசி முடித்துவிட்ட பின்பு, பீட அழைப்பு கொடுக்கலாமென்று எண்ணினேன். பிறகு ''வேண்டாம்'' என்று நினைத்து, விட்டுவிட்டேன், என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன், ''இப்பொழுதோ என் கண்ணால் உம்மைக் காண விரும்புகிறேன்'' என்று இங்கு கூறப்பட்டுள்ளது. இப்பொழுது அவர் இங்கிருக்கிறார், அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது நாம் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைப்போம். இதை செய்வதாக வாக்களித்துள்ள அவரே, ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்'' என்றார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர் அப்படி சொல்லியிருக்கிறாரா. நீ விசுவாசியா? அப்படியானால், ''ஆமென்“ என்று சொல்லுங்கள். அவர் வாக்களித்ததை செயல்முறைப்படுத்தினதை இப்பொழுது நீங்கள் கண்டீர்கள். அதே தேவன்... இந்த ஜனங்கள் யாரையாவது கேட்டுப் பாருங்கள். அவர்களை நான் கண்டதேயில்லை. அவர்களைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது, இப்பொழுது கண்டால் அவர்களை எனக்குத் தெரியாது, அது கூடாத காரியம். ஆனால் வேத வாக்கியம் நிறைவேற வேண்டியதாயுள்ளது. அது நிறைவேறினால், நாம் கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும், மனுஷகுமாரன் வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார் என்றும் நாம் அறிகிறோம்... ஏனெனில், அவர் மாமிச சரீரத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அது சரியா? அது உண்மையென்று நமக்குத் தெரியும். நீங்கள் அவர் மேல் விசுவாசம் வைத்திருக்கும் விசுவாசிகளென்று உங்களை அழைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் கரங்களை இப்பொழுது நீங்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கிறீர்கள். உங்கள் கரங்களை நீங்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் போது, உங்கள் கண்களுக்கு முன்பாக இதை உண்மையாகும் படி செய்த அதே தேவன், ''அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று சொல்வதற்கு இங்கேயிருக்கிறார். ''அதே தேவனுடைய குமாரன்!'' ''விசுவாசிகள் கைகளை வைக்கும் போது, அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று அவர் கூறினதாக நான் கேள்விப்பட்டேன். ''என் காதால் அதைக் கேள்விப்பட்டேன், இப்பொழுது என் கண்களால் அதைக் காணட்டும். அவர் அவ்வாறு செய்வதாக வாக்களித்துள்ளார்.'' நான் ஜெபிக்கும் போது, நீங்களும் ஜெபியுங்கள்: 100கர்த்தராகிய இயேசுவே, பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தினாலே, உமது ஆவி இந்த ஜனங்களின் இருதயத்துக்குள் இறங்குவதாக; அந்த தேவனுடைய உண்மையான விசுவாசம் இந்த வாக்குத்தத்தத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்திக் கொடுத்து, அவர்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வைக்கும்படியான உம்முடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்துள்ள இந்நேரத்தில், பரலோகத்தின் தேவன் தாமே இவர்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்குவாராக. கர்த்தாவே, அப்படியே ஆகக்கடவது. இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, உம்முடைய மகிமைக்கென்று அது அப்படியே ஆகும்படி அருள்புரிவீராக. 101நீங்கள் கேட்டுக் கொண்டதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் இருதயத்திலுள்ள ஒன்று அப்படி கூறுகிறதா? அந்த ஊக்கத்தின் ஒரு சிறு அணு, ''எல்லாம் முடிந்து விட்டது! அது செய்து முடிந்து விட்டது!'' என்று கூறுவதை நீங்கள் உணருகிறீர்களா? நாம் காதுகளினால் கேட்டுக் கொண்டிருந்தோம், இப்பொழுது நமது கண்களால் அதைக் காணமுடியுமென்று தேவனுடைய கட்டளை உரைக்கிறது. யோபு, ''என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது'' என்று கூறினான். நீங்கள் வார்த்தையின் மூலம் அதைக் கேள்விப்பட்டீர்கள். ''விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்'' (ரோமர்;10:17). இப்பொழுது அது கிரியை செய்வதை உங்கள் கண்களினால் காண்கிறீர்கள். இதைக் கூறின அதே தேவன். இந்த காரியங்கள் சம்பவிக்கும் போது, ''விசுவாசிக்கிறவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று கூறியுள்ளார். நீங்கள் ''சுகமடைந்து விட்டீர்கள்'' என்று உங்கள் இருதயத்தில் ஊக்கம் தோன்றினதா? அப்படி தோன்றியிருந்தால், உங்கள் கைகளையுயர்த்துங்கள். ஆமென்! அந்த உண்மையான அப்போஸ்தல சுகமடைதல், நீங்கள் உண்மையாகவே கூறுகிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அல்லேலூயா! இதுதான் நமக்குத் தேவை. இப்பொழுது நாம் எழுந்து நின்று அவருக்குத் துதி செலுத்துவோம்: கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி. கர்த்தரின் நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. நான் அவரைத் துதிப்பேன்! நான் அவரைத் துதிப்பேன் பாவிகளுக்காக கொலையுண்ட, ஆட்டுக் குட்டியானவரைத் துதிப்பேன்; எல்லா ஜனங்களே, அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள்; ஏனெனில் அவருடைய இரத்தம், ஒவ்வொரு கறையையும் கழுவியுள்ளது. 102அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்கு மகிமையைச் செலுத்துவோம். பாருங்கள், ''நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்'' என்று உங்களிடம் கூறின அதே வாய்க்காலின் வழியாக தேவனால் உங்களுக்கு வெளிப்படுத்தப் பட்டிருக்குமானால்; யோபின் வழியாகவும் தீர்க்கதரிசிகளின் வழியாகவும் அவர் அசைந்த அதே வாய்க்காலின் வழியாக தேவன், நீங்கள் கிறிஸ்தவர்கள் என்னும் முறையில், உங்கள் வழியாக அசைவாடி, ''அவருடைய தெய்வீக வெளிப்பாட்டின் மூலம் நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள்'' என்று. அறிவித்திருப்பாரானால், அது நடப்பதை ஒன்றுமே தடைசெய்ய முடியாது. எல்லா ஜனங்களே, அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள், ஏனெனில் அவருடைய இரத்தம் ஒவ்வொரு... (ஒவ்வொரு சந்தேகத்தையும் கழுவியுள்ளது). நான் அவரைத் துதிப்பேன்! நான் அவரைத் துதிப்பேன்! பாவிகளுக்காக கொலையுண்ட ஆட்டுக் குட்டியானவரைத் துதிப்பேன்; எல்லா ஜனங்களே, அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள்; ஏனெனில் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவியுள்ளது. 103ஓ, அவரை நீங்கள் நேசிக்கிறீர்கள் அல்லவா? ஆ, எவ்வளவு அற்புதமானது! கர்த்தாவே, என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன், விசுவாசம் கேள்வியினால் வரும்; இப்பொழுதோ தேவன் தம்மை ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தினது போல, உலகமானது சோதோமின் நிலையையடையும் நாட்களில் மனுஷகுமாரன் தம்மை வெளிப்படுத்துவார் என்னும் வாக்குத்தத்தம் நிறைவேறும்படியாக தம்மை வெளிப்படுத்துவதைக் காண்கிறேன். பரலோகத்திலிருந்து இறங்கி வந்த மூன்று தூதர்கள் புறப்பட்டுச் சென்றனர். சோதோமில் ஒரு ஸ்தாபனக் குழு இருந்தது. அங்கு ஒரு பில்லி கிரகாமும் ஒரு ஓரல் ராபர்ட்ஸும் சென்றனர். நான் உங்களுக்கு ஏற்கனவே கூறியுள்ளபடி சபை சரித்திரத்திலேயே இதுவரை ஆபிரகாம் என்னும் பெயரைப் போல் முடிவுபெறும் ஒரு பெயரைச் கொண்ட தூதன் உலகம் முழுவதும் சபைக்கு அனுப்பப்படவில்லை. காம், கிரகாம். கிரகாம் ஆறு எழுத்துக்களைக் கொண்டது, (ஆங்கிலத்தில் G-R-A-H-A-M என்று ஆறு எழுத்துக்களை சகோ. பிரான்ஹாம் எழுத்து கூட்டுகிறார் - தமிழாக்கியோன்). அது மனிதனின் எண். ஆனால், ஆபிரகாம் என்னும் பெயர் ஏழு எழுத்துக்களைக் கொண்டது (ஆங்கிலத்தில் Abraham ஏழு எழுத்துக்களைக் கொண்டது - தமிழாக்கியோன்). அது தேவனுடைய பூரணமும் பரிபூரணமுமான எண் பாருங்கள்? அங்கு சென்ற தூதர்கள் என்ன செய்தனர் என்று கவனியுங்கள். அவர்கள் வார்த்தையைப் பிரசங்கித்து, அவர்களை வெளியே அழைத்து, அவர்களிடம் மனந்திரும்பும் படி கூறினர். 104ஆனால் ஆபிரகாமுடன் தங்கினவரோ, அவருக்குப் பின்னால் கூடாரத்திலுள்ள சாராள் என்ன செய்து கொண்டிருக்கிறாள், என்ன நினைத்துக் கொண்டிருக்சிறாள் என்று ஆபிரகாமிடம் கூறி அந்த அற்புதத்தை செய்தார். அவருக்குள் இருந்த இயேசு, ''உலகம் முன்பு சோதோம் இருந்த நிலையையடையும் போது மனுஷகுமாரன் மறுபடியுமாக வெளிப்படுவார்'' என்று கூறினார். மற்றெல்லா வேத வாக்கியங்களும் அது அப்படியே நடக்கும் என்று உறுதிப்படுத்துகின்றன. ''ஆதியிலே (சபையோர், வார்த்தை இருந்தது'' என்கின்றனர்-ஆசி). ''அந்த வார்த்தை'' (சபையோர், ''தேவனிடத்திலிருந்தது'' என்கின்றனர்-ஆசி). அந்த வார்த்தை ''(சபையோர், தேவனாயிருந்தது'' என்கின்றனர்-ஆசி) ''அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' அது சரியா? லூக்காவிலும், மல்கியாவிலும் இன்றைக்காக வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள அதே வார்த்தை மாமிசமாகி நம்மிடையே வாசம் பண்ணுகிறதை நாம் காண்கிறோம், நமது காதால் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டோம், இப்பொழுதோ அவர் தமது சொந்த வார்த்தையை வியாக்கியானம் செய்வதை (நமது சொந்த கண்களால்) காண்கிறோம். நமக்கு மனிதனின் வியாக்கியானம் தேவையில்லை. ஓ, இங்கேயும் தொலைபேசியின் மூலம் இணைக்கப்பட்டுள்ளதுமான ஜீவனுள்ள தேவனுடைய சபையே! காலதாமதமாவதற்கு முன்பு சீக்கிரம் உறக்கத்தினின்று எழுந்திரு. தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், முந்தி அவர் என்னை நேசித்ததால்; சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தில். 105சபையே, உன் சொந்த கண்களால் காண்கிறாய் என்று உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?(இக்கடைசி நாட்களில், இம்மணி நேரத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள) ஜீவிக்கும் தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டு, அந்த ஜீவிக்கிற வார்த்தை மாமிச உருவில் வியாக்கியானம் செய்யப்பட்டு, தேவன் நமது மத்தியில் இருப்பதை, உன் சொந்த கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறாய். என் சொந்த கண்களால் அவரைக் காண்கிறேன். அவர் அப்படி செய்வாரென்று நான் கேள்விப்பட்டேன். எல்லா பழைய காலத்து பக்திமான்களும் இந்நாளை எதிர் நோக்கியிருந்தனர், ஆனால், அது வெளிப்பட்டதை நமது சொந்த கண்ணால் காண்கிறோம். எத்தனை பழைய கூச்சலிடும் மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், உண்மையான பெந்தேகொஸ்தேயினர் தங்கள் காலத்தில், இது நிகழ்வதைக் காண வாஞ்சித்தனர்! இது நிகழுமென்று அவர்களில் அநேகர் அறிந்திருந்தனர். ஆனால், நாமோ இன்று நின்று கொண்டு அது நிகழ்ந்ததைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஓ! நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் அல்லவா? 106''நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லோரும் அறிந்து கொள்வார்கள்'' என்று இயேசு கூறினார். (யோவான்;13:35). எனவே நாம் அவரை நேசிப்பதனால், நாம் ஒருவரோடொருவர் கைகுலுக்கி ''நான் அவரைத் துதிப்பேன்! நான் அவரைத் துதிப்பேன்'' என்னும் பாடலைப் பாடுவோம். சரி. நான் அவரைத் துதிப்பேன்! நான் அவரைத் துதிப்பேன்! பாவிகளுக்காக கொலையுண்ட ஆட்டுக் குட்டியானவரைத் துதிப்பேன்; எல்லா ஜனங்களே, அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள், ஏனெனில் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவியுள்ளது. 107அன்றிரவு பெல்ஷாத்சாரின் ராஜாத்தி ராஜாவின் முன்னிலையில் என்ன கூறினாள்? ''உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், அவன் கருகலானவைகளைத் தெளிவிக்கிறவன்'' என்றாள். (ஆங்கிலத்தில், ''dissolving of doubts'' அதாவது ''சந்தேகங்களைத் தெளிவிக்கிறவன்'' என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தானி;5:12). இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் சந்தேகங்களைத் தெளிவிக்கிறவராயிருக்கிறார்! அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சகோ. பிரான்ஹாம் யாரிடத்திலோ பேசுகிறார்-ஆசி). சந்தேகங்களைத் தெளிவிக்கிறவர். கிறிஸ்துவின் இரத்தம் ஒவ்வொரு கறையையும் போக்குகிறது சந்தேகம் என்னும் கறையை. அவிசுவாசத்தைக் காட்டிலும் பெரிய பாவம் இவ்வுலகில் இல்லை. ''விசுவாசியாதவனோ, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று''; (யோவான்;3:18). அது சரியா? ''அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான். ஒரே ஒரு பாவம் உண்டு, அதுதான் அவிசுவாசம். புகைபிடித்தல் பாவம் அல்ல, சபித்தல் பாவம் அல்ல, விபச்சாரஞ் செய்தல் பாவம் அல்ல, பொய் சொல்லுதல் பாவம் அல்ல, இவை யாவும் அவிசுவாசத்தின் விளைவுகள். அவிசுவாசம்! நீங்கள் விசுவாசிக்காததனால் இவைகளைச் செய்கிறீர்கள். நீங்கள் விசுவாசித்தால், இவைகளைச் செய்யமாட்டீர்கள். 108ஓ! ஓ! என்ன... அற்புதம்! ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் ஒவ்வொரு சந்தேகத்தையும் கழுவிவிட்டது. நாம் அவருடைய வார்த்தையை ஆணித்தரமாக விசுவாசிக்கிறோம். வார்த்தை மாமிசமானது என்று நாம் விசுவாசிக்கிறோம். வார்த்தை மாமிசமாகி, அவருடைய பிரசன்னத்தினால் வார்த்தையை உறுதிப்படுத்துகிறதென்று நாம் விசுவாசிக்கிறோம். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நாளை காலை, கர்த்தருக்குள் ஒரு மகத்தான தருணத்துக்காக உங்களை இங்கு காண்போமென நம்புகிறோம். இப்பொழுது உங்கள் தலைகளை வணங்குங்கள். ஆராதனையை நான் சகோ. லிண்ட்சேயிடம் ஒப்படைக்கிறேன்.